சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் தற்கொலை முயற்சி
Click here to see the BBC interactive
சென்னையில் உள்ள ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுத் திரும்பியுள்ளார்.
சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் பொறியியலில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர்தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அவர் நேற்று, திங்கள்கிழமை மாலையில், தன்னுடைய அறையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அவர் வெகுநேரமாக வெளியில் வராத நிலையில், மாலை ஆறு மணி அளவில் நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- மனச்சோர்வுக்கு உண்மையில் மருந்துகள் தீர்வு அளிக்குமா? - ஆய்வு எழுப்பும் கேள்விகள்
- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் - உண்மையில் யார் மீது தவறு? - கள நிலவரம்
- மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? சில புரிதல்களும் விளக்கங்களும்
இதையடுத்து கோட்டூர்புரம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அதே விடுதியைச் சேர்ந்த வீரேஷ் என்ற மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பினார்.
படிப்பு தொடர்பான அழுத்தத்தால் இந்தத் தற்கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவங்களையடுத்து ஐஐடி முன்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்னை ஐஐடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து













Click it and Unblock the Notifications