பாதியில் கட்டான காதல்.. விமானத்தில் வந்த காதலன்! 51 இடங்களில்.. அலறிய இளம்பெண்! ஷாக் ஆன போலீஸ்!
ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 51 முறை ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
டெல்லியில் ஷ்ரத்தாவை, அஃப்தப் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இறுதியில் நீண்ட நாட்களாக ஷ்ரத்தாவை தொடர்புகொள்ள முடியாததால் எழுந்த சந்தேகத்தால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அஃப்தப் வசமாக சிக்கிக் கொண்டார்.
இந்த கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் அதிர்ச்சி
வடமாநிலங்களில் காதல் தகராறில் கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 51 முறை ஸ்குரூ டிரைவரால் காதலன் குத்திக் கொலை செய்த பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செல்போன் காதல்
சத்தீஸ்கர் மாவட்டம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் நீல் குஷம். இவருக்கு இணையதளம் மூலம் பஸ் கண்டெக்டர் ஷபாஷ் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கம் பின்னர் செல்போன் எண்களை பறிமாறிக் கொள்வது வரை வளர்ந்துள்ளது. தினமும் மணிக்கணக்கில் பேசி வந்த இருவரும் பின்னர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதல் என்ற பெயரில் கான் தினமும் பேச வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

ஆத்திரம்
ஒரு கட்டத்தில் ஷபாஷ் கானின் தொல்லைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலனின் தொல்லை தாங்க முடியாமல் நீல் அவருடன் பேசுவதை துண்டித்துள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் ஆத்திரமடைந்த ஷபாஷ் கான், குஜராத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு விமானத்தில் வந்து, நீல் குஷம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அருகில் இருந்த ஸ்குரூ டிரைவரை எடுத்து உடல் முழுவதும் 51 முறை குத்தியுள்ளார்.

போலீஸ் தீவிரம்
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த நீல் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனால் பயந்து போன கான் போலீசார் தன்னைக் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அங்கிருந்து ஷபாஷ் கான் தப்பியோடியுள்ளார். இந்நிலையில் நீல் குஷம் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி தப்பியோடிய கானை தேடி வருகின்றனர். மேலும் அவரைக் கைது செய்வதற்காக 4 தனிப்படைகளை அமைத்து விசாரணை துரிதப்படுத்தியுள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications