வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கத்தி முனையில் பலாத்காரம் செய்த திருடன்!
வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த திருடன் நகை, பணத்தையும் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த திருடன் நகை, பணத்தையும் திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பாந்திரா கிழக்கு பாரத் நகர் பகுதியில் 11 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றிருந்தனர்.
இதனால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது, 20 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.

பலாத்காரம்
அப்போது சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என கத்தியை காட்டி அந்த வாலிபர் சிறுமியை மிரட்டியுள்ளார். மேலும் அந்த நபர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கெஞ்சிய சிறுமி
தன்னை விட்டு விடும்படி சிறுமி எவ்வளவோ கதறியும் கெஞ்சியும் அதனை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாத அந்த திருடன் சிறுமியை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பெற்றோர் அதிர்ச்சி
பின்னர் சிறுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை திருடிச்சென்றுள்ளான். இந்தநிலையில் மாலையில் வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர் மகள் கை, கால்கள் கட்டப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோரிடம் கதறல்
அவளது கட்டுகளை அவிழ்த்துவிட்டு நடந்த சம்பவத்தை கேட்டனர். அப்போது, திருடனால் தான் கற்பழிக்கப்பட்டதையும் நகை, பணத்தை திருடி சென்றதையும் கூறி கதறினார் சிறுமி.

பதறிய பெற்றோர்
இதைக்கேட்டு பதறிப்போன சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து பி.கே.சி. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடனை தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications