இந்த உ.பி. கிராமத்தில் 200 ஆண்டுகளாக அட்சய திரிதியை கொண்டாடுவதே இல்லை: ஏன் தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மட்டும் 200 ஆண்டுகளாக அட்சய திருதியை கொண்டாடுவது இல்லை.
இன்று நாடு முழுவதும் அட்சய திருதியை கொண்டாடப்பட்டு வருகிறது. அட்சிய திருதியை முன்னிட்டு நகைக்கடைகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. நல்ல நாளான இன்று தங்கம் வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுக்கிறார்கள்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தல்பேஹட் என்ற கிராமத்தில் மட்டும் 200 ஆண்டுகளாக அட்சய திருதியை கொண்டாடப்படுவது இல்லை. தல்பேஹட் பகுதியை மோர் பிரஹலாத் என்ற மன்னர் 1802ம் ஆண்டு முதல் 1842ம் ஆண்டு வரை ஆண்டு வந்தார்.
அவரது ஆட்சி காலத்தில் அட்சய திருதியையொட்டி சில இளம் பெண்கள் காட்டில் இலை எடுக்கையில் மன்னரின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று தல்பேஹட் கோட்டையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனை கண்டிக்கும் விதமாக தான் அந்த கிராமத்தில் அட்சய திருதியை கொண்டாடுவதை மக்கள் நிறுத்தினர். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. அட்சய திரிதியை கொண்டாட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் புதுவித பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். அதாவது பெண்களை கவுரவிக்கும் விதமாக ஆண்கள் அவர்களின் காலைத் தொட்டு கும்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications