கேரளாவிலும் ஒரு அபிராமி.. கள்ளக்காதலுக்காக இந்த பெண் செய்த வேலையை பாருங்க மக்களே!!
கள்ளக்காதலனுக்காக கட்டிய கணவரை நாடகமாடி ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

திருவனந்தபுரம்: கள்ளக்காதலனுடன் ஓடிப்போக கட்டிய கணவரை நாடகமாடி ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணமானவர்கள் இடையே ஏற்படும் முறையற்ற உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொலை செய்வது, மனைவி கணவனை கொலை செய்வது போன்ற செய்திகள் நித்தம் வெளியாகிய வண்ணம் உள்ளன.
அண்மையில் சென்னையை அடுத்த குன்றத்தூரில் பெண் ஒருவர் கள்ளக்காதலுக்காக தான் பெற்ற 2 குழந்தைகளை கொலை செய்தார். இந்நிலையில் கள்ளக்காதலன் உடன் ஓட்டம் பிடிக்க பெண் ஒருவர் சினிமா பாணியில் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனு - மீனு காதல்
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் மனு. மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் இவருக்கும் கோட்டயத்தை சேர்ந்த மீனு என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

3 வயதில் குழந்தை
இதைத்தொடர்ந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

மனைவியின் நாடகம்
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் மனு வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் கணவருக்கு போன் செய்த மனைவி தன்னையும், மகனையும் ஒரு கும்பல் கடத்த வீட்டுக்குள் புகுந்து கழுத்தில் கத்தியை வைத்து அறுப்பதாக கூறினார்.

வாட்ஸ்அப்புக்கு வந்த போட்டோ
அவர் கூறி முடிக்கும் முன்பே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கழுத்து அறுக்கப்பட்டது போன்ற போட்டோ மனுவின் வாட்ஸ் அப்புக்கு வந்தது.

ஆங்காங்கே ரத்தக்கறை
இதனால் அதிர்ச்சியடைந்த மனு போலீசாருடன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரத்தக்கறை ஆங்காங்கே சிதறி கிடந்தது.

ரத்தம் இல்லை குங்குமம்
ரத்தக்கறையை பார்த்த போலீசார் இது ரத்தக்கறை அல்ல என சந்தேகித்து சோதனை செய்த போது அது ரத்தம் இல்லை, குங்குமம் என்று தெரியவந்தது. இதனால் மீனுவின் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரது செல்போன் எண்ணை வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.

கையும் களவுமாக..
அப்போது அவர் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மீனு, அவரது மகன் மற்றும் அவருடன் இருந்த வாலிபர் ராஜிவ் என்ற வாலிபரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

கள்ளக்காதல் அம்பலம்
3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்திய மீனுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜிவ் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்
இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டனர். அதற்கான காத்திருந்த அவர்கள் ஒரு கும்பல் கடத்தியதாக நாடகமாடலாம் என்று திட்டம்போட்டனர். திட்டத்தின்படி ஒரு கும்பல் கழுத்தை அறுத்து கடத்தி விட்டதாக கூறிவிட்டு மகனுடன் கள்ளக்காதலன் ராஜிவுடன் ஓட்டம் பிடித்தார்.

இருவரும் கைது
ஆனால் திட்டம் சொதப்பவே போலீசாரிடம் வசமாக சிக்கினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மீனு மற்றும் கள்ளக்காதலன் ராஜிவ் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications