வீறிட்டழுத குழந்தையை மாடிப்படியில் தூக்கி எறிந்த தாய்.. அதிர்ச்சி தரும் வீடியோ
டெல்லியில் தாய் ஒருவர் தனது கைக்குழந்தையை மாடிப்படியில் வீசியெறிந்துள்ளார். பதபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லி: டெல்லியில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் தாய் ஒருவர் தனது கைக்குழந்தையை மாடிப்படியில் வீசியெறிந்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் ஒருவர் தனது கைகுழந்தையை மேலே இருந்து மாடிப்படியில் வீசியெறியும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்களை பதபதைக்க செய்கிறது.

அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ கடந்த 11ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பதிவாகியுள்ளது. அதில் இளம் தாய் ஒருவர் வீட்டின் கட்டிலில் அமர்ந்து ஆண் ஒருவருடன் தகராறு செய்து வருகிறார்.
அப்போது அருகில் தூங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய் தனது குழந்தையை தூக்கிச் சென்று வீட்டின் கதவருகில் நின்று கொண்டு மாடிப்படியில் வேகமாக வீசியெறிகிறார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடிவரும் குடும்பத்தினர் மாடிப்படியில் இறங்கி குழந்தையை மீட்க ஓடுகின்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காயமடைந்த குழந்தை உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த இளம்தாய் மீது அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications