என்ன விட அழகா நீ? கஞ்சா கணவனை ஏவி தாய் மகளை சிதைத்த விபரீத சைக்கோ துர்கா! பதறிப் போன ராணிப்பேட்டை!
ராணிப்பேட்டை : தன்னைவிட அழகாக இருந்ததால் கணவர் ஆசைப்படுகிறார் என பக்கத்து வீட்டு பெண்ணை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறிய பெண் ஒருவர், அவர் கேட்காதால் தனது கஞ்சா போதை கணவனை ஏவி பெண் மற்றும் அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 வயதான பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து ராணிப்பேட்டையில் வசித்து வந்திருக்கிறார். கணவனை பிரிந்த போதும் தனது 17 வயது மகளை அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்க வைத்திருக்கிறார்.
அவர்களது அருகே பகுடு பாஸ்கரன் என்ற பாஸ்கரன் தனது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். கஞ்சா திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த அவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களை ஏராளமான வழக்குகளும் இருந்திருக்கிறது. அடாவடிகள் அதிகமானதால் குண்டர் சட்டத்தில் சிறையில் கம்பி எண்ண வைத்திருக்கிறது காவல்துறை.

கஞ்சா தொழில்
சிறையிலிருந்து வந்த போதும் தனது கஞ்சா தொழிலை கைவிடாத பாஸ்கரன் அவ்வப்போது தெருவில் கஞ்சா போதையில் கலவரம் செய்வது வழக்கமாம். அப்போதுதான் தனது அருகே வீட்டில் வசித்து வந்த கன்னியாகுமரி பெண்ணின் மீது அவருக்கு பாலியல் ரீதியான ஆசை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பாஸ்கரனின் வீட்டில் அடிக்கடி பிரச்சனைகளும் முளைத்திருக்கிறது. இதனால் கோபமடைந்த பாஸ்கரனின் மனைவி துர்கா அந்த கன்னியாகுமரி பெண்ணிடம் நேராகவே சென்று 'நீ அழகா இருப்பதால் என் கணவர் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதனால் எங்களுக்குள் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

மனைவி மிரட்டல்
இதனால் இந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி மிரட்டி இருக்கிறார் இதனை எதிர்பாராத அந்தப் பெண் உங்கள் கணவரை சொல்லி வையுங்கள் நான் என் செல்ல வேண்டும் என கேட்டு பதிலுக்கு சண்டை போட்டு உள்ளார். இதனால் துர்காவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் தனது கணவரை வைத்தே அந்த பெண்ணை தெருவில் இருந்து துரத்தி விட வேண்டும் என விபரீத முடிவு எடுத்திருக்கிறார் துர்கா. இதனால் அந்தப் பெண் மட்டுமல்லாது அந்தப் பெண்ணின் 17 வயது மகளும் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் பலாத்காரம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா வியாபாரத்தை முடித்துவிட்டு கஞ்சா போதையில் பாஸ்கரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது தனது கணவனை அழைத்துக்கொண்டு அருகே வசித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற துர்கா அவரது வீட்டு கதவை தட்டி இருக்கிறார். கதவை திறந்த போது கணவனை உள்ளே அனுப்பிய துர்கா வெளிப்புறமாக தாழ்ப்பால் போட்டுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல தனது வீட்டிற்கு சென்றார். கஞ்சா போதையின் உச்சத்தில் இருந்த பாஸ்கரன் வீட்டிற்கு சென்றவுடன் கன்னியாகுமரி பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வீடியோ பதிவு
தொடர்ந்து அந்தப் பெண்ணை வீட்டில் இருந்த அறையில் வைத்து பூட்டிவிட்டு சிறுமி என்றும் பாராமல் அவரது 17 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இருவரின் வாழ்க்கையை சிதைத்ததோடு மட்டுமல்லாமல் தான் செய்த விபரீத செயலை தனது செல்போனில் போட்டோ வீடியோ எடுத்து வைத்திருக்கிறார் தொடர்ந்து கஞ்சா போதை தலைக்கேறும் போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டுக்குச் செல்லும் பாஸ்கரன் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதிரடி கைது
ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட கொடுமை தனது மகளுக்கும் ஏற்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத அந்தப் பெண் இது குறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர். இந்த கொடூர செயலுக்கு மூளையாக செயல்பட்ட துர்காவையும் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தான் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த அதிகாலை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications