பதறிய மோடி.. திடீரென பிரதமரின் காரை மறித்த பெண்.. ஜார்க்கண்ட்டில் நடந்த பரபர சம்பவம்! யார் இவர்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் காரை ஒரு பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்நிலையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று பிர்ஸா முண்டா ஜெயந்தி விழா நடந்தது.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பழங்குடியின மக்களின் அடையாளமாக கருதப்படும் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை தான் பிர்ஸா முண்டா ஜெயந்தியாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

இதைடுத்து அவரது பிர்ஸா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகத்தில் உள்ள 25 அடி உயர சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பழங்குடியின மக்களுக்காக ரூ.24,000 கோடி திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடியின் காரின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அவரது கார் சென்ற சாலையின் இருபுறமும் போலீசார் அணிவகுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வேளையில் திடீரென்று ஒரு பெண் கூட்டத்தில் இருந்து பிரதமர் மோடியின் காருக்கு முன்பு குதித்து மறுத்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பிரதமர் மோடியின் கார் பயணம் சிறிது நேரம் தடைப்பட்டது. அதன்பிறகு மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ராஞ்சியில் பிரதமர் மோடியின் காரை மறித்த பெண்ணின் வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ராஞ்சியின் சீனியர் எஸ்பி சந்தன் சின்ஹா கூறுகையில், ‛‛இந்த பெண் டெல்லியில் 10 நாள் தங்கி பிரதமர் மோடியை சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பிரதமரை சந்திக்க முடியவில்லை. இதற்கிடையே தான் பிரதமர் மோடி ராஞ்சிக்கு வருவதை அவர் அறிந்துள்ளார். இதையடுத்து மோடியை சந்திக்க அவர் இப்படி செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications