இதே நாளில் தான் மலர்ந்தது "அந்த"க் காதல்... மலரும் நினைவுகளில் மூழ்கிய கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை வித்தியாசமாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவாக வெளியிட்டுள்ளார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்.
கடந்த 2013ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் தயவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த ஆட்சி நீடிக்கவில்லை. ஒன்றரை மாதத்தில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் அதிருப்தியைச் சந்தித்தார் கெஜ்ரிவால்.
ஆனால், விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை மீண்டும் டெல்லியில் நிரூபித்தது ஆம் ஆத்மி. அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று மீண்டும் டெல்லி முதல்வரானார் கெஜ்ரிவால்.

இன்றோடு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பாக, டெல்லி மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கெஜ்ரிவால் அரசு சிறப்பாக நடைபெற்று வருவதாக 48 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
Last year, on this day, Delhi fell in love with AAP. This bonding is deep n everlasting.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 14, 2016
இந்நிலையில், தனது ஓர் ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த மகிழ்ச்சியை டிவிட்டர் பதிவு செய்துள்ளார் கெஜ்ரிவால். உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதையும் இணைத்து கவிதை போல் பதிவு செய்துள்ளார் அவர்.
அதாவது, ‘கடந்த ஆண்டு இதே நாளில் தான் டெல்லி ஆம் ஆத்மி மீது காதலில் விழுந்தது. ஆழமான இந்தப் பந்தம் என்றும் நிலைத்திருக்கும்' என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications