பலாத்காரம்.. கருக்கலைப்பு.. புகார் அளிக்க கையில் கருவுடன் சென்ற இளம் பெண்.. அதிர்ச்சியில் போலீசார்!
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க கையில் கருவுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க கையில் கருவுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெண்கள் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்படுவதும் தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை நிரூபிக்க இளம் பெண் தனது 5 மாத கருவை கையில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வயது இளம் பெண் பலாத்காரம்
உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் ஹசன்பூர் கொட்வாலி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் தனது தாயுடன் ஹசன்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பலாத்காரம் கருக்கலைப்பு
அதில் மனோஜ் என்ற 22 வயது இளைஞர் தன்னை 5 மாதங்களுக்கு முன் துப்பாக்கி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்ததாக என தெரிவித்து உள்ளார். மேலும் அந்த இளைஞர் தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார் அந்த பெண்.

கையில் கரு - போலீஸ் அதிர்ச்சி
கருக்கலைப்பு செய்ததற்கான ஆதாரமாக பையில் வைத்து 5 மாத கருவையும் கையில் எடுத்து சென்று காண்பித்தார். பையில் கரு இருந்ததைக் கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தடயவியல் சோதனை
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மனோஜை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கருவை பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அப்பகுதியில் பெரும் பரபரப்பு
இளம்பெண் ஒருவர் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்று பலாத்கார புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications