ஒரே பெண்ணுடன் தொடர்பு...சொல்லியும் விடாமல் உல்லாசம்...நண்பனை கொன்று புதைத்த இளைஞர் கைது
கள்ளக்காதலியை அபகரித்து உல்லாசம் அனுபவித்த நண்பனை மது போதையில் கொன்று புதைத்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சித்தூர்: தனது கள்ளக்காதலியுடன் தொடர்பில் இருந்த நண்பனை கொன்று புதைத்து விட்டு ஜாலியாக சுற்றி வந்த வாலிபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு வாழ்க்கையிலும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண உறவு முறையைத் தாண்டி ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட தொடர்பு இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் இஸ்மாயில் என்பதாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முதிமடுகு கிராமத்தைச் சேர்ந்தவர். எலக்ட்ரீசியன். இவரும் வி.கோட்டா அடுத்துள்ள நாராயண நகர் பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவரும் நண்பர்கள்.
இஸ்மாயில் கடந்தாண்டு பெங்களூருக்கு சென்று உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். முதிமடுகு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இப்பெண்ணுக்கும், நரேசுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது உறவினர் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரே பெண்ணுடன் தொடர்பு
அதைக் கண்டுகொள்ளாத நரேஷ், அந்தப்பெண்ணுடன் ஒரே வீட்டிலேயே தங்கியுள்ளார். இஸ்மாயில் பெங்களூருவில் இருந்து வரும் போது வி.கோட்டாவில் அடிக்கடி நரேஷ் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுடன் இஸ்மாயிலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. நரேஷ் இல்லாத நேரத்தில் வரும் இஸ்மாயில், அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பாராம்.

எச்சரித்த நரேஷ்
இதையறிந்த நரேஷ், இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்பை கைவிடவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், இஸ்மாயிலை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். சில தினங்களில் இஸ்மாயில் மாயமானார். இஸ்மாயிலை காணாத பெற்றோர் வி.கோட்டா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இஸ்மாயிலின் செல்போனை வைத்தும் விசாரித்து வந்தனர்.

சிக்கிய நரேஷ்
இஸ்மாயில் காணாமல் போவதற்கு முன்பு நரேஷ்தான் கடைசியாக பேசியது தெரியவந்தது. காவல்துறையினர் நரேஷிடம் பேசிய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, விடாமல் விசாரணை நடத்தினர். அப்போது இஸ்மாயிலை கொலை செய்து புதைத்ததை நரேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் நரேஷை நேற்று கைது செய்து மேலும் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

மது போதையில் தகராறு
இஸ்மாயில் மீது கொலை வெறியில் இருந்த நரேஷ், தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்மாயிலிடம் கேட்டார். திட்டம் போட்டபடியே கொலை நடந்த தினத்தன்று மாலை வி.கோட்டாவுக்கு வந்த இஸ்மாயில், நரேசுக்கு போன் செய்து வருமாறு கூறியுள்ளார். அன்றிரவு இருவரும் வி.கோட்டாவில் உள்ள ஏரிக்கு சென்று மது குடித்துள்ளனர். ஆனால் இஸ்மாயிலுக்கு அதிக மது ஊற்றி கொடுத்துள்ளார்.

கொன்று புதைத்த நரேஷ்
போதையில் இருந்த இஸ்மாயிலிடம் நரேஷ் தனது காதலியை விட்டு விடுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நரேஷ், மதுபாட்டிலை உடைத்து இஸ்மாயில் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் இஸ்மாயில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து நரேஷ் அங்கேயே பள்ளம் தோண்டி சடலத்தை புதைத்துவிட்டு தலைமறைவானார். நாட்கள் செல்லச்செல்ல இஸ்மாயிலை மறந்து போனார் நரேஷ். அதே நேரத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிக்கி இப்போது சிறையில் காலம் தள்ளி வருகிறார்.












Click it and Unblock the Notifications