For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் ஒரு பிராடு, சட்டவிரோதமானது.. ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்த ஒரே நீதிபதி.. சந்திரசூட்!

ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மட்டும் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆதார் சட்ட விரோதமானது என கூறிய ஒரே நீதிபதி- வீடியோ

    டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மட்டும் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அதேபோல் ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது என்றும் கூறினார்.

    ஆதார் எண் கட்டாயமா என்ற வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

    நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். 5 பேரில் 3 நீதிபதிகள் தீர்ப்பை சிக்ரி வாசித்தார். மற்ற 2 நீதிபதிகள் வேறு தீர்ப்பு தனியாக வழங்கினார்கள்.

    இதில் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார். அவர் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

    முடியாது

    முடியாது

    அதன்படி, ஆதார் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதார் தனி மனித உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆதார் மூலம் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. இது வாக்கு வங்கி அரசியலை நோக்கியும், மக்களை மிரட்டுவதை நோக்கியும் அழைத்து செல்லும்.

    பல குழப்பம்

    பல குழப்பம்

    ஆதாரில் நிறைய குழப்பங்கள் உள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற போதுமான பலன்கள் ஆதார் மூலம் கிடையாது. மக்கள் நலத்திட்டங்களை இது தடுக்கிறது. எல்லா வசதியும் இதன் காரணமாக எல்லோருக்கு சென்று சேர்வதில்லை.

    திருட்டு இருக்கிறது

    திருட்டு இருக்கிறது

    ஆதாரில் தகவல் திருட்டு நடக்கிறது. இதை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதார் அமைப்பு இந்த தகவல் திருட்டை பெரிய விஷயமாக கருதுவதில்லை. இதில் தகவல்களை எப்படி எதிர்காலத்தில் மாற்ற வேண்டும் ஆலோசனை வழங்கப்படவில்லை.

    நிதி மசோதா முடியாது

    நிதி மசோதா முடியாது

    ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது. நிதி மசோதாவாக இல்லாத ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நிதி மசோதா என்று கூறி தாக்கல் செய்வது ஏமாற்றுவேலை. ஆதாரை நிதி மசோதாவாக தாக்கல் செய்தது அரசியலமைப்பிற்கு எதிரானது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    இறுதியாக நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாரை கட்டாயமாக ஏற்க முடியாது என்றார். ஆனால் அதே சமயம் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். அதேபோல் நான்கு நீதிபதிகளும் ஆதாரை நிதி மசோதாவாக கருத முடியும் என்றும் கூறியுள்ளனர். இதனால் ஆதார் நான்கு நீதிபதிகளின் உத்தரவின் படி அரசு சேவைகளுக்கு கட்டாயமாகிறது.

    English summary
    Supreme Court on Aadhaar matter: Justice Chandrachud says, "Aadhaar violates the right to privacy as it could possibly lead to profiling of persons and voters. The decision to treat a bill as a money bill is amenable to judicial review" in his verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X