அப்பாடா இனிமே தான் நிம்மதி..தட்கல் டிக்கெட்டுக்கு தள்ளாட வேண்டாம்! ஏஜெண்ட்களுக்கு ரயில்வே கடிவாளம்!
சென்னை: ரயில்வே துறையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகள் தலையீடு மற்றும் பாட்களை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்வதால் பயணிகள் மிகுந்த பாதிப்படைந்தனர். இந்த நிலையில் தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, ஏஜெண்டுகளுக்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சேவை துறைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறை என்றால் அது ரயில்வே துறை தான். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ரயில்வே துறை காஷ்மீரையும் கன்னியாகுமரியும் இணைக்கிறது.
நரம்பு மண்டலம் போல இந்தியா முழுவதும் இருக்கும் அதன் நெட்வொர்க் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான பயணிகளை இணைக்கிறது. நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட ரயில்வே துறை, பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

தற்போது மின்சார ரயில்கள் தொடங்கி எக்ஸ்பிரஸ் ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான பயணத்தை குறைந்த செலவில் வழங்குவதால் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் ரயில்வே துறையையே நாடுகின்றனர். 100 நாட்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் திட்டமிட்ட பயணங்களுக்கு ரயில்வே வரப்பிரசாதமாக இருக்கிறது.
மேலும் அவசரகால பயணங்களுக்கும் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிலையில் ஏஜென்ட்கள் ஆதிக்கம், போலி ஐடிக்ள் மூலம் டிக்கெட் புக்கிங், இணையதள பாட்களை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்வதால் அவசர தேவைக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் காத்திருப்பு காலமும் ரயிலுக்கு ரயில் மாறிய நிலையில் அனைத்து ரயில்களுக்கான காத்திருப்பு காலத்தை 120 நாட்களாக ரயில்வே மாற்றி உள்ளது.
இந்த நிலையில் தட்கல் டிக்கெட் உண்மையான பயணிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாட்டை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஏஜெண்டுகளுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கும் முதல் 30 நிமிடங்களுக்கு ஏஜென்ட்கள் முன்பதிவு செய்ய முடியாது. ஏசி கோச்சுகளுக்கு காலை 10 மணி முதல் 10:30 மணி வரையிலும், ஏசி அல்லாத பூச்சிகளுக்கு காலை 11 மணி முதல் 11:30 மணி வரை ஏஜென்ட்களால் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது. தவறான முறையில் தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்வதை தடுக்க ஆன்லைன் முன்பதிவில் ஆதார் கார்டு ஓடிபி மூலம் சரி பார்ப்பதும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஆன்லைன் மட்டுமல்லாது ரயில்வே கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் ஆதார் சரிபார்ப்பு அவசியமாகியுள்ளது. ஏஜென்ட்களால் முதல் 30 நிமிடங்களுக்கு தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாது என்பதால் பொதுமக்கள் நேரடியாக எந்தவித தடங்களும் இன்றி தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் தட்கல் டிக்கெட் விலை முன்பதிவு செய்யும்போதும் ஆதார் சரி பார்ப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகளை நீ எந்தவித சிரமமும் இன்றி தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என்கிறது ரயில்வே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications