டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு ஜூம்மா மசூதி ஷாகி இமாம் புகாரி ஆதரவு! ஆம் ஆத்மி நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஜூம்மா மசூதி இஷாகி இமாம் புகாரி ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ இந்த ஆதரவை நிராகரித்துவிட்டது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இருப்பினும் ஆம் ஆத்மியே வெல்லக் கூடும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மிக்கு 55 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருக்கிறது.

Aam Aadmi Party rejects Jama Masjid Shahi Imam's offer of support to it in Delhi Assembly elections

இதேபோல் ஆம் ஆத்மிக்கு திரிணாமுல் காங்கிரஸும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமாம் புகாரி, முஸ்லிம்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ இந்த ஆதரவை நிராகரித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், நாங்கள் எப்போதும் மதவாத சக்திகளுக்கு எதிரானவர்கள். அனைத்து மத மக்களும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+