இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம், கடவுள் என்னை காப்பாற்றுவார்: கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தன்னை கடவுள் காப்பாற்றுவார் என்றும், அதனால் தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம் என்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எனக்கு எந்த பாதுகாாப்பும் தேவையில்லை. ஏனென்றால் கடவுள் தான் எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு. நான் எந்த பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறவில்லை. அப்படி நான் ஏற்றுக்கொண்டதாக அனுப்பியதாக கூறப்படும் கடிதம் பொய்யானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

kejriwal

கெஜ்ரிவால் 22 போலீசார் அடங்கிய இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.

முன்னதாக கெஜ்ரிவாலின் உயிருக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பால் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தின்போது ஆம் ஆத்மி கட்சி தலைவர் யோகேந்தர் யாதவ் மீது கருப்பு மை வீசப்பட்டது. அந்த மையை வீசியவர் ஷாலிமார் பாக்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சாகர் பந்தாரி என்பது தெரிய வந்தது. அவர் கெஜர்வால் மீது தான் மை வீசி நினைத்தாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+