ஆம் ஆத்மியும் பாஜகவும் இணைந்து செயல்பட 'தரகராக' இருக்க ரெடி: பாபா ராம்தேவ்
டெல்லி: மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருவதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராம்தேவ் கூறியுள்ளதாவது:
ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் ஆதரவு இப்போது இல்லை. இதனால் அவர்கள் பாஜகவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றனர். அதற்கான வழிகளை ஆராய்ந்தும் கொண்டிருக்கின்றனர்.

நரேந்திர மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க அரவிந்த் கேஜ்ரிவால் முன்வர வேண்டும். அதன் பின்னர் இரண்டு தரப்பும் இணைந்து செயல்படுவதற்கு 'தரகராக' செயல்பட தயாராக இருக்கிறேன்.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நான் சொல்வது, காங்கிரஸின் கைப்பாவையாக இருக்க வேண்டாம் என்பதுதான்.. ஆம் ஆத்மிக்கென தனித்த கொள்கை எதுவும் இல்லை. குழப்பத்துடன்தான் இருக்கின்றனர்.
முன்புதான் ஏழைமக்கள் தங்களது ரட்சகனாக கேஜ்ரிவாலை கருதினர். இப்போது அந்த நினைப்பையே அவர்கள் கைவிட்டுவிட்டனர்.
இவ்வாறு ராம்தேவ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications