மத்திய அரசு டிஸ்மிஸ் செய்த சஞ்சீவ் சதுர்வேதியை டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக்கும் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழல் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பதவியை இழந்த சஞ்சீவ் சதுர்வேதியை ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
ஐ.எப்.எஸ். அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி டெல்லியில் உள்ள மத்திய அரசு நடத்தும் எய்ம்ஸ் மருத்துவமனையின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவராக இருந்தார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்கும் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் மத்திய அரசோ அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் டெல்லி முதல்வராக நாளை பதவியேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சதுர்வேதியை டெல்லி ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக ஆக்க திட்டமிட்டுள்ளார்.

சஞ்சீவ் சதுர்வேதி ஒரு நேர்மையான அதிகாரி. அவர் ஊழல் தடுப்பு பிரிவில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என டெல்லி துணை முதல்வராக பொறுப்பேற்கும் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவர் பதவியில் இருக்க சதுர்வேதிக்கு தகுதி இல்லை என்று கூறி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அவரை கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்தது.
சதுர்வேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை பார்த்த 2 ஆண்டுகளில் பல விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பயணம் செய்த அதிகாரிகள், எய்ம்ஸ் புற்றுநோய் மையத்தில் அதிகாரி ஒருவர் தனது செல்ல நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தது உள்ளிட்டவை குறித்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications