‘பிஜ்லி சத்யாகிரஹா’வில் கலந்து கொண்டவர்களுக்கு 50% மானியம்: கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி: கடந்த ஆண்டுகளில் ஆம் ஆத்மியோடு இணைந்து மின்கட்டண உயர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் அளிப்பதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மின்கட்டணம் அதிகரிக்கப் பட்டது. அப்போது அதனை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மக்களை மின்கட்டணம் செலுத்தாமல் அரசுக்கு எதிராக போராடுமாறு அழைப்பு விடுத்தனர்.
ஆம் ஆத்மியினரின் அழைப்பை ஏற்று பலர் மின்கட்டணம் செலுத்தவில்லை. இந்நிலையில், நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைத்துள்ளது.தேர்தல் வாக்குறுதியில் சொல்லப் பட்டிருந்தபடி, ஆட்சியில் அமர்ந்ததும் டெல்லி மின்கட்டணத்தைக் குறைத்தார் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால்.
இந்நிலையில், தங்களது அழைப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெகுமதியாக அப்போது கட்டத்தவறிய மின்கட்டணத்தில் ஐம்பது சதவீதம் மானியம் அளித்து உத்தரவிட்டுள்ளார் கெஜ்ரிவால்.

போராட்டம்...
டெல்லியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியினர் 'பிஜ்லி சத்யாகிரஹா' என்றா போராட்டத்தைத் துவக்கினர்.

ஆதரவு தந்த மக்கள்....
கடந்த 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் நடந்த அந்தப் போராட்டத்தில் சுமார் பத்து லட்சம் மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். ஆம் ஆத்மியின் அழைப்பை ஏற்று சுமார் இருபத்தி நாலாயிரம் டெல்லி குடும்பங்கள் தங்களது மின்கட்டணத்தை கட்டவில்லை.

பதிலுக்குப் பதில்...
தற்போது, மின் கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்திய அந்தக் குறிப்பிட்ட இருபத்தி நாலாயிரம் குடும்பங்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

என்ஜாய், அபராதமும் இல்லை....
மேலும், அவர்களுக்கு அபராதம் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசு தனது பங்கிற்கு ரூ. 6 கோடி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications