காங். வேட்பாளரின் மனைவி கையைப் பிடித்து இழுத்தாரா ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.?

ஆனால் இது விஷமமான, அவதூறான புகார் என்றும், கட்சிப் பெயரை கெடுக்க காங்கிரஸார் முயற்சி்ப்பதாகவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது. .சர்ச்சையில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.வின் பெயர் தர்மேந்தர் கோலி. இவர் சீமாபுரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பெயர் வீர் சிங் திங்கன்.
சீமாபுரி தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கோலியின் ஆதரவார்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினர். அதில் கோலியும் கலந்து கொண்டார். ஊர்வலம், திங்கன் வீடு உள்ள பகுதியில் போனபோது திடீரென கோலி, வீட்டுக்குள் புகுந்தாராம். அங்கிருந்த திங்கனின் மனைவியிடம் தவறாக நடக்க முற்பட்டாராம். கையைப் பிடித்து இழுத்தாராம்.
ஆனால் இந்தப் புகாரை கோலியும், ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் மனீஷ் சிசோடியாவும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து சிசோடியா கூறுகையில் திங்கன் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன. எங்களது கட்சியின் பெயரைக் கெடு்க்கும் உள்நோக்கத்துடன்தான் இந்தப் புகாரை அவர் சுபமத்தியுள்ளார். அவரது புகார்களுக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என்றார்.
கோலி கூறுகையில், நான் திங்கன் மீது அவதூறு வழக்குத் தொடரப் போகிறேன். நான் ஊர்வலத்தில்தான் இருந்தேன். வேறு எங்குமே போக முடியவில்லை. காரணம், என்னைச் சுற்றிலும் தொண்டர்கள் புடை சூழ்ந்திருந்தனர். சீமாபுரி, கோபுல்புரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலம் போனது. நான் திறந்த ஜீப்பில்தான் இருந்தேன். என்னால் ஜீப்பை விட்டுக் கூட இறங்க முடியாத நிலை. அப்படி இருக்கையில் நான் எப்படி திங்கன் வீட்டுக்குள் புகுந்திருக்க முடியும் என்று கேட்டார்.
தேர்தலுக்கு முன்பே இத்தொகுதியில் சர்ச்சை வெடித்தது. முதலில் இத்தொகுதியில் கோலியின் தங்கைதான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்தே கோலிக்கு சீட் வழங்கப்பட்டது. தனது சகோதரியை திட்டமிட்டுக் கொலை செய்து விட்டனர் என்று அப்போது குற்றம் சாட்டியிருந்தார் கோலி என்பது நினைவிருக்கலாம்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications