மொத்தமாக லீவு போட்டு மிரட்டிய 200 ஆபீசர்ஸ்.. ஆடிப்போன டெல்லி ஆம் ஆத்மி அரசு
டெல்லி: இரண்டு மூத்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டெல்லி கெஜ்ரிவால் அரசை கண்டித்து 200 அரசு ஊழியர்கள் மொத்தமாக விடுமுறை எடுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விடுமுறை போராட்டம் என்பது பாஜகவின் சதி என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி அரசாங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், டெல்லி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவு சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்றவர்களாகும். இந்நிலையில், டெல்லி அமைச்சகம் எடுத்த முடிவுகளில், கையெழுத்திட மூத்த அதிகாரிகளான யஷ்பால் கர்க்-சிறப்பு செயலாளர்-அமலாக்கம் மற்றும் சுபாஷ் சந்திரா-சிறப்பு செயலாளர்-சிறைத்துறை ஆகியோர் கையெழுத்திட மறுத்தனர்.

இதையடுத்து டெல்லி உள்துறை அமைச்சர் சத்யந்தர் ஜெயின், அவ்விரு அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால் சக அரசு ஊழியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏனெனில், மூத்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரமே, டெல்லி அரசுக்கு கிடையாது என்கிறது தற்போதுள்ள நடைமுறை. துணை நிலை ஆளுநர்தான் இதுபோன்ற விஷயங்களில், மத்திய அரசுடன் கலந்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் உள்ளவராகும்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் 200 பேர் மொத்தமாக நேற்று விடுமுறை எடுத்து டெல்லி அரசை ஆட்டம் காண வைத்தனர். அரசு ஊழியர்களின் இந்த எதிர்ப்பை, பாஜகவின் மறைமுக மிரட்டல் என்று ஆம் ஆத்மி கூறி குற்றம்சாட்டியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications