ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கில் வரும் 25-ந் தேதி தீர்ப்பு
டெல்லி: மாணவி ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹேமராஜ் கொலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 25-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
மருத்துவ தம்பதிகளான ராஜேஷ் தல்வார், நூபுர் ஆகியோரின் மகள் ஆருஷி. 9ம் வகுப்பு படித்து வந்தாள். 2008 மே மாதம் வீட்டில் ஆருஷி கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.

மாடியில் வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, சந்தேகத்தின் பேரில் முதலில் ராஜேஷ் தல்வாரை கைது செய்தது பின்னர் ஆதாரம் இல்லை என்று கூறி விடுவித்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் கூறியதை அடுத்து சிபிஐ விசாரித்தது. மருத்துவ தம்பதியினர்தான் ஆருஷியையும் ஹேமராஜையும் கொன்றனர் என்றும் எப்படி தாக்கி கொலை செய்தனர் என்பதையும் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் விவரித்தனர்.
இந்நிலையில் ஆருஷி-ஹேம்ராஜ் கொலை வழக்கில் வரும் நவம்பர் 25ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
