கைவிட்ட பெற்றோர்.. அரணாக நின்ற தெருநாய்கள்! இரவு முழுக்க பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு! நெகிழ்ச்சி
கொல்கத்தா: இந்தக் காலத்தில் நாய்கள் என்றாலே பொதுமக்கள் அஞ்சி ஓடும் அளவுக்குப் பல செய்திகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், அதற்கு நேர் மாறாகப் பெற்றோரே கைவிட்ட பச்சிளம் குழந்தையை விடிய விடியத் தெருநாய்கள் பாதுகாத்துள்ளது. பிறந்து சில மணி நேரத்தில் பெற்றோர் அக்குழந்தையை ரோட்டில் வீசிய நிலையில், இரவு முழுக்க குழந்தைக்குத் தெருநாய்கள் பாதுகாப்பாக நின்றுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே நாம் திரும்பிய பக்கமெல்லாம் நாய்க்கடி குறித்த செய்திகளையே பார்த்து வருகிறோம். நாய்க்கடி என்பது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் தெரு நாய்கள் முழுமையாக ஒழிக்க வேண்டும், கொல்ல வேண்டும் எனக் கூட பலரும் சொல்லி வருகிறார்கள்.

நாய்க்கடி பிரச்சினை
நமது நாட்டில் நாய்க்கடி பிரச்சினை அதிகரித்துவிட்டது உண்மைதான். இருப்பினும், பல நேரங்களில் நாம் எதிர்பார்க்காத வகையில் நாய்கள் நமக்கு உதவும். அப்படியொரு சம்பவம் தான் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. அங்குள்ள நதியா மாவட்டத்தில் உள்ள நவதீப் நகரில் ஒரு அதிசயமான நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது அங்குள்ள ரயில்வே குடியிருப்பின் கழிவறைக்கு வெளியே, ஒரு பச்சிளங்குழந்தையை யாரோ சிலர் கைவிட்டனர். இரவு அதீதக் குளிர் நிலவிய சூழலில், ரோட்டிலேயே அந்தக் குழந்தையைப் போட்டுச் சென்றனர். பிறந்து சில மணிநேரங்களே ஆன அந்தக் குழந்தையின் உடலில் தொப்புள் கொடி கூடஅப்படியே இருந்தது. போர்வை கூட இல்லாமல் அப்படியே அந்தக் குழந்தை தரையில் கிடந்தது.
அதிசயம்
அப்போது தான் அங்கு அந்த அதிசயம் நடந்துள்ளது. பொதுவாக மக்கள் நாய்களைக் கண்டாலே விரட்டி அடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நாய்கள் கூட்டம் தான் அந்த குழந்தையைப் பாதுகாத்துள்ளது. குழந்தையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போல அமைத்து அந்த நாய்கள் அப்படியே அமர்ந்துள்ளன.. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவை குரைக்கக் கூட இல்லையாம்.
குழந்தைக்குப் பாதுகாப்பாக அவை நகராமல் இரவு முழுவதும் அப்படியே அமர்ந்துள்ளன.. விடியும் வரை யாரும் குழந்தைக்கு அருகே நெருங்காத வகையில் இருந்துள்ளன. இது குறித்து அக்கம் பக்கத்தின் கூறுகையில், "காலையில் எழுந்து பார்த்த போது, உண்மையாகவே ஒரு நொடி ஷாக் ஆகிவிட்டேன். அதை நம்பவே முடியவில்லை.. நாய்கள் ஆக்ரோஷமாக இல்லை. அவை மிகவும் உஷாராக இருந்தன. அக்குழந்தைக்குப் பாதுகாப்பாக இருந்தன" என்றார்.
குழந்தை மீட்பு
விடிந்த பிறகு அருகே வசிக்கும் பெண் ஒருவர் மெல்ல அருகே சென்றுள்ளார். அதன் பிறகே நாய்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளன. அந்தப் பெண் குழந்தையைத் துணியால் சுற்றி, எடுத்து வந்துள்ளார். அதன் பிறகு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அக்குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஆரோக்கியமாகவே இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், குழந்தை பிறந்து உடனேயே அதை ரோட்டில் போட்டதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர். முதலில் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இரவு நேரத்தில் குழந்தையை இப்படி விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
மக்கள் வியப்பு
இதில் பலருக்கும் நாய்கள் செயல் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அங்கு வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், "இங்குச் சில காலமாகவே நாய்கள் பிரச்சினை அதிகரித்துவிட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். ஆனால், இன்று அதே நாய்களின் செயல்தான் குழந்தையைக் காப்பாற்றியுள்ளது" என்றார். பெற்றோரே தங்கள் குழந்தையைக் கைவிட்ட நிலையில், அந்த நாய்களின் விடிய விடியப் பாதுகாப்பாக நின்றதே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications