மனைவி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்- மத்திய பாஜக அரசு மீது மமதா உறவினர் அபிஷேக் பானர்ஜி பாய்ச்சல்!
கொல்கத்தா: வெளிநாடு செல்ல முயன்ற மனைவியை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள், தலைவர்கள் மீது மத்திய விசாரணை ஏஜென்சிகள் பல்வேறு வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளில் ஒன்று நிலக்கரி ஊழல் வழக்கு. மமதாவின் உறவினரும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி மீது இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஏற்கனவே அபிஷேக் பானர்ஜி, ருஜிரா பானர்ஜியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ருஜிரா பானர்ஜி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் துபாய் செல்ல இருந்த ருஜிரா பானர்ஜியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவத்துக்கு அபிஷேக் பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில், பிரதமர் மோடிக்கு நான் வெளிப்படையாகவே கூறுவது என்னவென்றால் என்னுடன் அரசியல் ரீதியாக மோதுங்கள்.. என் மனைவி மற்றும் 9 வயது மகள், 3 வயது மகனுடன் மோத வேண்டாம். அரசியல் ரீதியாக என்னுடன் மோதுங்கள். நீரவ் மோடி, சோக்ஸி இவர்கள் எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஓடும்போது எனன் செய்து கொண்டிருந்தீர்கள்? நாட்டின் இன்சூரன்ஸ் நிறுவன பணத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பணத்தையும் அதானி சூறையாடியது குறித்து விசாரணை நடந்ததா? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications