பெங்களூர் பள்ளியில் சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை சீரழித்தவர் நீதிமன்ற காவலில்
பெங்களூர்: பெங்களூரில் சாக்லேட் கொடுத்து 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி அட்டென்டர் நாகராஜை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
கிழக்கு பெங்களூரில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய மெட்ராஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை பள்ளியில் அட்டென்டராக இருந்த நாகராஜ்(27) என்பவர் சாக்லேட் கொடுத்து அக்டோபர் 22 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் பலாத்காரம் செய்துள்ளார்.

காலையில் பள்ளியில் பிரார்த்தனை முடிந்த பிறகு காலியாக இருந்த வகுப்பறையில் வைத்து நாகராஜ் சிறுமியை சீரழித்துள்ளார்.
நவம்பர் 26ம் தேதியில் இருந்து சிறுமி ஒரு மாதிரியாக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த 28ம் தேதி தான் தன்னை நாகராஜ் ஏதோ செய்ததாகவும் தனக்கு வலிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
5 மாதங்களில் பெங்களூரில் 5 பள்ளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications