ஒருதலைக்காதல்: புதுமணப்பெண் மீது ஆசிட் வீச்சு… மூவர் படுகாயம்
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் புது மணப்பெண் மீது, ஒருதலையாகக் காதலித்தவர் ஆசிட் வீசியதில் மணப்பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தார். இதனால் திருமணம் நின்றுபோனது.
லூதியானாவின் பர்னாலா நகர் பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க இருந்தது. அவர் திருமண அலங்காரம் செய்து கொள்வதற்காக சரபா நகரில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்றார். அங்கு கூரியர் பையன் போல வந்த 25 வயதான வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மணப்பெண்ணின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பினார்.
இச்சம்பவம் முழுவதும் அழகு நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முகத்தின் பெரும்பகுதி, கழுத்து, மார்பு மற்றும் வயிற்று பகுதிகள் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மணப்பெண்ணை மருத்துவமனை யில் அனுமதித்துள்ளனர். அருகில் இருந்த மேலும் இரண்டு பெண்களும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டனர். மணப்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோர சம்பவம் குறித்து லூதியானா காவல்துறை உயரதிகாரி என்.எஸ். தில்லான் கூறியதாவது:
மணமகளின் மீது ஆசிட் வீசியவரின் விபரம் தெரியவந்துள்ளது. அவர் மணமகளின் தோழியின் சகோதரர். மணப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
தன்னை மணந்து கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அடிக்கடி மிரட்டியுள்ளார். அதன்படி அவர் திருமணத்துக்கு சிலமணி நேரம் இருக்கும்போது, மணப்பெண் மேல் ஆசிட் வீசியுள்ளார். அவரை கைது செய்ய தேடிக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு தில்லான் கூறினார்.
ஆசிட் விற்பனைக்கு நாடுமுழுவதும் கட்டுபாடு விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆசிட் வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications