போதையில் கார் ஓட்டிய நடிகர் நாகார்ஜூனாவின் மருமகள் கைது
ஹைதராபாத்: போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக நடிகர் நாகர்ஜூனாவின் சகோதரி மகளை ஹைதராபாத் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த சகோதரி அனுமோலு நாகா சுசீலா. இவரின் மகள் சாஹித்யா, கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சாலையில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த டிராபிக் போலீஸார் அவருக்கு ஆல்கஹால் சோதனை செய்தனர்.

அப்போது அவருடைய இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு அரசு அனுமதித்துள்ள அளவை விட அதிகமாக இருந்ததால் சாஹித்யாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கார் அவரது தாத்தா அக்கினேனி நாகேஸ்வர் ராவ் பெயரில் உள்ளது.
இதனையடுத்து சாஹித்யாவை கைது செய்த போலீசார் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். நாளை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாகார்ஜுனனின் சகோதரி மகள் போலீஸில் பிடிபட்ட விஷயம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று மட்டும் இவ்வாறு குடித்து விட்டு கார் ஓட்டியதாக மொத்தம் 23 கார்கள் பறிமுதல் செய்யபட்டு உள்ளன. இத்தகவலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாச ரெட்டி தெரிவித்து உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications