பிரபல நடிகை கடத்தல் வழக்கு.. திலீப்பை ஹைகோர்ட்டும் கைவிட்டது
பிரபல நடிகையை கடத்திய வழக்கில் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
திருவனந்தபுரம்: பிரபல நடிகையை கடத்திய வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
பிரபல திரைப்பட நடிகை கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் ஓடும் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கும் நடிகர் திலீப்பிற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

விசாரணையின் அடிப்படையில் அவர் கடந்த 10-ஆம் தேதி கைது செய்யப்பட்ட கையோடு ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். அதேநேரத்தில் ஆலுவா போலீஸார் திலீப்பை காவலில் எடுத்து அனுமதி கோரினர். இதையடுத்து ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.
இதையடுத்து அங்கமாலி நீதிமன்றத்தில் மீண்டும் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அவரை வரும் 25-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அவரது போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். எனினும் அவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications