நடிகையை கண்ட இடத்தில் தொட்ட பிரபல நடிகர்.. சர்ச்சை பெரியளவில் வெடித்ததால் மன்னிப்பு கேட்டார்
லக்னோ: போஜ்புரி நடிகர் பவன் சிங், சக நடிகையான அஞ்சலி ராகவ் என்பவரின் அனுமதியின்றி அவரை முறையற்று தொட்டுப் பேசியிருந்தார். இந்தச் சம்பவத்தால் போஜ்புரி சினிமாவில் இருந்தே விலகுவதாக அஞ்சலி ராகவ் அறிவித்திருந்தார். இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகப் பவன் சிங் அறிவித்துள்ளார்.
நமது நாட்டில் இன்னுமே பெண்கள் மீதான அத்துமீறல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. அப்படியொரு சம்பவம் தான் சமீபத்தில் லக்னோவில் நடந்தது. அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் போஜ்புரி நடிகை அஞ்சலி ராகவிடம் பிரபல நடிகர் அத்துமீறினார்.

அத்துமீறல் சம்பவம்
அதாவது நிகழ்ச்சி மேடையிலேயே அஞ்சலியின் இடுப்பை பவன் சிங் தொட்டார். ஏதோ ஒட்டியிருப்பதாகச் சொல்லி மீண்டும் தொட்டிருந்தார். இது நடந்தபோது அஞ்சலி மிகவும் சங்கடமாக உணர்ந்த போதிலும், பவன் சிங் அதைப் பொருட்படுத்தவில்லை. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பேசுபொருள் ஆனது. இதற்கிடையே இது தொடர்பாகப் பவன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அஞ்சலியிடம் தவறாக நடந்து கொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை என்பதை அவர் குறிப்பிட்டார்.
மன்னிப்பு கேட்ட பவன்
அவர் மேலும், "அஞ்சலி ஜி, எனக்குக் கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் லைவ்வில் நீங்கள் பேசியதைப் பார்க்க முடியவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து எனக்குத் தெரிய வந்தபோது, மிகவும் வருத்தமாக இருந்தது. எனக்கு உங்கள் மீது எந்தவொரு தவறான எண்ணமும் இல்லை. இருந்த போதிலும், எனது செயலால் உங்களுக்கு ஏதேனும் சங்கடம் ஏற்பட்டிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
பவன் சிங்கின் "சையா சேவா கரே" என்ற பாடலின் விளம்பர நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நடந்தது. இந்தப் பாடலில் பவன் சிங் மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர். ஹரியானாவைச் சேர்ந்த அஞ்சலி சிங், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் போஜ்புரி சினிமாவில் நடிக்கவே போவதில்லை என அறிவித்தார்.
அஞ்சலி குற்றச்சாட்டு
முன்னதாக சமீபத்தில் இந்தச் சம்பவம் குறித்து அஞ்சலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "இரண்டு நாட்களாக நான் கவலையில் உள்ளேன். இந்தச் சம்பவம் நடந்தபோதே நான் பவனை அறைந்திருக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். சிலர் பவனின் செயலை நான் ரசித்ததாகக் கூட சில சொல்கிறார்கள். அனுமதியின்றி பொது இடத்தில் என்னைத் தொட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேனா? எனது இடுப்பில் ஏதோ ஒட்டியிருப்பதாகச் சொல்லியே பவன் தொட்டார். எனக்கு அப்போது என்னவென்று புரியவில்லை.
இனி நடிக்கப் போவதில்லை
எந்தப் பெண்ணையும் அவரது அனுமதியின்றித் தொடுவதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். அது மிகவும் தவறானது. அதிலும் இதுபோல முறையற்று தொடுவது மிகவும் தவறு. இதுவே ஹரியானாவில் நடந்திருந்தால், நான் பதிலளிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அங்கிருந்த பொதுமக்களே பதிலளித்திருப்பார்கள். ஆனால் நான் லக்னோவில் அவர்களது இடத்தில் இருந்தேன். இதனால் நான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. நான் இனி போஜ்புரி துறையில் பணியாற்ற மாட்டேன்" என்று அவர் கூறியிருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications