"சனாதன தர்மத்தை பாதுகாக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்!" ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அழைப்பு
விசாகப்பட்டினம்: சனாதன தர்மத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார விஷயங்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சனாதன தர்ம வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், திருப்பதி தேவஸ்தானத்தில் இழந்த புனிதத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பதிக்குக் கோடிக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக இருந்தபோது திருப்பதி தேவஸ்தானத்தில் குளறுபடிகள் நடந்தாக புகார் எழுந்தது. மேலும், அங்கு வழங்கப்பட்டும் லட்டில் மாட்டுக் கொழுப்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பவன் கல்யாண்
இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இதைச் சுட்டிக்காட்டி இந்துக்களின் நம்பிக்கைகள் மற்றும் மரபுகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யச் சனாதன வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பவன் கல்யாண், உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு திருப்பதி ஒரு ஆன்மீகத் தலம் மட்டுமல்ல.. அது ஒரு புனிதமான தலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பதி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "சர்வதேச அளவில் இருக்கும் இந்துக்களுக்கு திருப்பதி திருமலை என்பது வெறும் யாத்திரைத் தலம் மட்டுமல்ல, ஒரு புனிதமான ஆன்மீகத் தலம். திருமலை லட்டு வெறும் ஒரு இனிப்பு மட்டும் அல்ல; அது ஒரு பகிரப்பட்ட உணர்வு. அதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அறிமுகமில்லாதவர்களுடன் கூட பகிர்ந்து கொள்கிறோம். ஏனெனில் அது நமது நம்பிக்கையைக் குறிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.5 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர். சனாதனத்தைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளும் நம்பிக்கைகளும் கேலிக்கு உள்ளாக்கப்படும்போது... அது வெறுமனே இந்துக்கள் மனதைப் புண்படுத்து மட்டுமின்றி.. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் சிதைக்கிறது.
சனாதன வாரியம்
மதச்சார்பின்மை எப்போதும் இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கைக்குப் பாதுகாப்பும் மரியாதையும் அவசியம். அதைச் சமரசம் செய்ய முடியாது.. நமது சனாதன தர்மம் பழமையான மற்றும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நாகரிகங்களில் ஒன்றாகும். எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் ஒப்புதலுடன் சனாதன தர்ம வாரியம் ஒன்றை நிறுவுவதற்கு இதுவே சரியான நேரம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு ட்வீட்டில், "முந்தைய திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் நிர்வாக தோல்விகள் மற்றும் அறநெறி இல்லாத செயல்கள் திருமலையின் புனிதத்தன்மைக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இது இப்போதிருக்கும் திருப்பதி தேவஸ்தான வாரியத்திற்கு ஒரு பெரிய பாடமாக அமைய வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கவும், லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் அவர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
நல்ல வாய்ப்பு
திருப்பதி தேவஸ்தான வாரியம் தொடங்கி அதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரி, இணை தலைமை நிர்வாக அதிகாரி, ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், விற்பனையாளர்கள் என அனைவரும் இதை ஒரு வேலையாக மட்டும் பார்க்கக்கூடாது.. லட்சக்கணக்கான சனாதன இந்துக்களுக்குத் தெய்வீகச் சேவை செய்யும் ஒரு புனிதமான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
நிதி, தரக் கட்டுப்பாடு, தணிக்கைகள், நன்கொடை என அனைத்துச் செயல்பாடுகளிலும் இனி முழுமையான வெளிப்படைத்தன்மையை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தகவலும் பொதுமக்களுக்குக் கிடைக்க வகையில் இருக்க வேண்டும்.
அனைவரது பொறுப்பு
சனாதன தர்ம வாரியத்தை அமைப்பது எதிர்காலத்திற்கான ஒரு நடவடிக்கை என்றாலும், தர்மத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு சனாதன இந்துவின் கூட்டுப் பொறுப்பாகவே உள்ளது. ஒருநாள் நம் நாட்டின் அனைத்துக் கோயில்களும் பக்தர்களாலும் சமூகத்தாலும் நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவே நமது கடமை" என்று பதிவிட்டுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications