பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக கலந்து கொண்ட நடிகை ரேகா...
டெல்லி: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக பங்கேற்றார் நடிகையும் ராஜ்யசபா எம்.பி.யுமான ரேகா. சிறிது நேரம் மட்டும் அவையில் உட்கார்ந்து இருந்த அவர் சிறிது நேரத்தில் கிளம்பிச் சென்றார்.
ராஜ்யசபா உறுப்பினரான இந்தி நடிகை ரேகா முதன்முறையாக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு நேற்று வருகை புரிந்தார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் நாடாளுமன்றம் வருவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை அவர் ராஜ்யசபாவிற்கு வந்தார். அவரது இருக்கை எண் 99-ல் அமர்ந்தார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டாலும் ரேகா, எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. சிறிது நேரம் மட்டும் அமர்ந்திருந்த அவர், காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியுடன் வெளியேறினார்.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் அவைக்கு சரியாக வருவதில்லை என கடந்த ஆண்டு சர்ச்சை கிளம்பியது. கடைசியாக இவர் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலும் ஒரே ஒருமுறை கலந்து கொண்டிருந்தார்.
இவருடன் சேர்த்து மற்றொரு நியமன உறுப்பினரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் ரேகாவை போல் அதிகமாக அவைக்கு வருவது கிடையாது. இதனால் இருவரும் அவைக்கு வராதது குறித்து அமளியில் ஈடுபட்ட சில உறுப்பினர்கள் சச்சின் மற்றும் ரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதற்கு, இருவரும் மாநிலங்களவை தலைவரிடம் ஏதாவது சிறப்பு அனுமதி பெற்றனரா எனவும் ஒருமுறை கேள்வி எழுப்பினர்.
ரேகாவை போல் அவைக்கு வருகை தராதவர்களுக்கு சாதகமாக அரசியலமைப்பு சட்டம் 104-ன் விதி சாதகமாக உள்ளதால், இருவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இவரது பதவிக் காலம் வரும் ஏப்ரல் 26, 2018 வரை உள்ளது. தமிழகத்தில் பிறந்த பாலிவுட் நடிகையான ரேகா தனது தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிகபட்ச தொகையான ரூபாய் ஒரு கோடியை வெள்ளநிவாரண நிதிக்கு ஒதுக்கியுள்ளார்.
தினசரி வந்தா செய்தியில்லை எப்பவாச்சும் வந்தாத்தான் செய்தி என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளார் நடிகை ரேகா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications