தண்டனை காலம் முடியும் முன்பே விடுதலையாகும் நடிகர் சஞ்சய் 'பரோல்' தத்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்.
1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குண்டுவெடிப்பிற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தது. ஆனால் அவர் சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கி வைத்திருந்ததால் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து 18 மாதங்கள் சிறையில் இருந்த சஞ்சய் தத் ஜாமீனில் வெளியே வந்து தனது தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை மறுபடியும் சிறையில் அடைக்குமாறு கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதையடுத்து புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தத் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நன்னடத்தையால் தண்டனை காலம் முடியும் முன்பே அவர் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். தண்டனை காலம் முடிய 7 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்படுகிறார்.
சஞ்சய் தத் அடிக்கடி பரோலில் வெளியே வந்து சென்றதால் விமர்சனத்திற்கு உள்ளானார். கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் முதல் 2014ம் ஆண்டு வரை அவர் 118 நாட்கள் பரோலில் வெளியே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications