இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது நடிகை ஸ்ரீதேவியின் உடல்.. போனிகபூரின் செய்தி தொடர்பாளர் தகவல்
மாரடைப்பால் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டுவரப்படுகிறது என அவரது கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மும்பை: மாரடைப்பால் துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டுவரப்படுகிறது என அவரது கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாயில் சனிக்கிழமை இரவு காலமானார். 54 வயதில் திடீர் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைந்தது இந்தியு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அறிக்கையில் வழங்குவதில் தாமதம்
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் நேற்று துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

முக்கியமான நபர்
இது குறித்து பேசிய துபாய் தடயவியல் துறை அதிகாரிகள், ஸ்ரீதேவி முக்கியமான நபர் என்பதால் அவருக்கு விரிவான உடற்கூறு சோதனை நடைபெற்றதாக தெரிவித்தனர். அதனால் உடற்கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

இன்று இந்தியா வருகிறது
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை கிடைக்க தாமதம்
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க தாமதமானதால் உடல் இன்று கொண்டுவரப்படவுள்ளதாக போனிகபூரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்றே இறுதிச்சடங்கு
இன்று மும்பை கொண்டு வரப்படும் ஸ்ரீதேவியின் உடல் திரையுலகினர் அஞ்சலிக்குப் பிறகு இன்று பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications