இந்தியா-பாகிஸ்தான் உறவு வலுப்பெற வாஜ்பாய் வழியில் பிரதமர் மோடி செல்ல வேண்டும்: அத்வானி அட்வைஸ்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவு வலுப்பெற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென தனது பயணத் திட்டத்தை மாற்றி பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். இந்த திடீர் பயணம் மற்றும் சந்திப்பினை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. ஐ.நா. சபையும் வரவேற்றுள்ளது.

மோடியின் இந்த திடீர் பயணத்தினை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி வரவேற்று பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் வரவேற்கதக்கது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை பேணும் வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்த முயற்சியை மோடி முன்னெடுத்து செல்ல வேண்டும். வாஜ்பாய் வழியில் நாட்டை மோடியும் மற்றவர்களும் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார்.
மோடியின் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்றுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இதுபோன்ற முயற்சிகள், அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை மேம்படுத்த விரும்புவது தொடர்பான நம்பிக்கையான செய்தியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஒருபுறம் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், எதிர் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications