2 ஆண்டுகளுக்குப் பின்.. 4,890 பக்தர்களுடன் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 4,890 பக்தர்களுடன் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு சென்று பனிலிங்க தரிசனம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை.

நடப்பாண்டில் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கி உள்ளது. முன்னதாக அமர்நாத் யாத்திரை செல்லும் முதல் குழுவின் பயணத்தை ஆளுநர் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று முதல் 43 நாட்களுக்கு அமர்நாத் புனித யாத்திரை நடைபெறும்.
காஷ்மீரின் தென்பகுதிகளான பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம் நிறைந்த குல்காம், சோபியான், புல்வாமா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமர்நாத் யாத்திரை தொடங்கும் நிலையில் இம்மாதத்தில் ஜம்மு காஷ்மிரீல் மொத்தம் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications