ஆசம் கானின் எருமைகளை அடுத்து எம்.பி. கதேரியாவின் நாயை தேடி அலையும் உ.பி. போலீஸ்
லக்னோ: ஆக்ரா எம்.பி. ராம் சங்கர் கதேரியாவின் நாய் காணாமல் போயுள்ளதால் அதை தேடும் பணியில் உத்தர பிரதேச மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா தொகுதி பாஜக எம்.பி. ராம் சங்கர் கதேரியா. முன்னாள் மத்திய அமைச்சரான அவர் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இந்தி பேராசிரியராகவும் உள்ளார். ஆக்ரா பல்கலைக்கழக வளாகத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ஆசை ஆசையாய் வளர்த்த நாய் காலு காணாமல் போய்விட்டது.

போலீஸ்
உடனே அவரது மனைவி மிருதுலா வெள்ளிக்கிழமை காலை பிராஜ் பகுதி பாஜக பொதுச் செயலாளர் அனில் சவுத்ரி மற்றும் கட்சியினருடன் காரில் ஆக்ரா எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.

புகார்
அடையாளம் தெரியாத நபர்கள் தங்களின் நாயை கடத்திவிட்டதாக மிருதுலா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். காலு என்பது கருப்பு நிற லாப்ரடார் வகை நாய். அது அரிய வகை நாய் என மிருதுலா தெரிவித்துள்ளார்.

நாய் அல்ல
காலு வெறும் நாய் கிடையாது. அது எங்கள் வீட்டு செல்லப் பிராணி என்று சொல்வதை விட எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றே கூற வேண்டும் என்கிறார் மிருதலா. இதையடுத்து ஹரி பர்வத் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஆசம் கான்
உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆசம் கானின் எருமைகள் காணால் போனபோது போலீசார் அதை கண்டுபிடித்து கொடுத்தார்களே. அப்படி இருக்கும்போது எங்கள் காலுவை ஏன் கண்டுபிடிக்க முடியாது என்று கேட்கிறார் மிருதுலா.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications