அது 'டாய்லெட்' பேப்பர்: ஆங்கில நாளிதழை விளாசிய சு.சாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதாட தனக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை என்று செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழை விளாசி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்வீட் செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அது குறித்த விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தான் வாதாட அனுமதி கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

உச்ச நீதிமன்றமோ நீங்கள் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்திடம் இருந்து இது தொடர்பாக உத்தரவு வாங்கி வாருங்கள் அதன் பிறகு இதை நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று தெரிவித்துவிட்டது. இது குறித்து அந்த ஆங்கில நாளிதழை செய்தி வெளியிட்டுள்ளது பற்றி அந்த நாளிதழை விளாசி சாமி ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்,

மீண்டும் அது டாய்லெட் பேப்பர் தான். இன்றைய நாளிதழில் ஜெயலலிதா வழக்கில் வாதாட எனக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. தி இந்து சரியாக புரிந்துள்ளது.

ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞர் அவ்வளவு தயாராக இல்லாததும், அவருக்காக வாதாடும் பெரிய வழக்கறிஞர்கள் ஆகியவை தான் எனக்கு கவலை அளிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+