ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு பதிலடி.. பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய ராணுவம்
டெல்லி: இந்திய ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவத்திற்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்துள்ளனர் இந்திய வீரர்கள்.
கெரன் செக்டார் பகுதியிலுள்ள 4 நிலைகளை ராணுவ வீரர்கள் தகர்த்துள்ளனர். மொத்தம் 7 நிலைகள் உள்ள நிலையில், மற்ற மூன்றையும் விரைவில் தகர்ப்போம் என்று ராணுவ அதிகாரி வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தன.

இந்த நிலைகளில் இருந்தபடிதான், இந்திய எல்லை, இந்திய துருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம். அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவார்கள். எனவே இந்த 7 நிலைகளையும் தகர்ப்பது இந்திய ராணுவத்தின் இலக்காக இருந்தது.
எப்போதெல்லாம், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூட்டை அதிகப்படுத்துகிறதோ, அப்போதெல்லாம், இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயலுவதையே அது எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், சக இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால், உடனடியாக பாகிஸ்தான் நிலைகளை தகர்த்துள்ளனர். ராக்கெட் லாஞ்சர்கள் இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இனிமேல் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைக்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications