மோடியைத் தொடர்ந்து தாவூத் இப்ராகிமுக்கு விருந்து வைத்த நவாஸ் ஷெரீப்- திடுக் தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்து வைத்த கையோடு இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருந்து வைத்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ரஷ்யா- ஆப்கானிஸ்தான் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி திடீரென பாகிஸ்தானுக்கும் சென்றார். அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் தெரிவித்த கையோடு, அவரது பேத்தியின் திருமண நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொண்டார்.

இது கடும் சர்ச்சையை கிளப்பிய போதும் அண்டை நாடுகளுடனுனான நல்லுறவை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மோடி மேற்கொண்டுள்ளார் என பாராட்டப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் விமான படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர்.
இதில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இத்தாக்குதலில் தொடர்புடையோரை தண்டிக்க பாகிஸ்தானும் தம் பங்குக்கு தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் வகையிலான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாள் மற்றும் இல்ல திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டதற்கு மறுநாள் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமும் நவாஸ் ஷெரீப் வீட்டு விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். அவருடன் மும்பையைச் சேர்ந்த சில தொழிலதிபர்களும் இவ்விருந்தில் கலந்து கொண்டனர்.
தாவூத் இப்ராகிமின் குடுபத்துக்கே நவாஸ் ஷெரீப் தடபுடலாக விருந்து வைத்திருந்தாராம்.. முன்னதாக கடந்த டிசம்பர் 25-26 தேதிகளில் தாவூத்தின் வலது கரம் சோட்டா ஷகீலின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து உளவுத்துறை கேட்டபோது முக்கியமான திருமண விழாவில் தாவூத் கலந்து கொள்ள இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications