பெரிய சதி.. ஜம்முவில் நுழைந்த 30+ பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. உளவுத்துறை வார்னிங்கால் பனிமலையில் ஆபரேஷன்
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து 30க்கும் அதிகமான பயங்கரவாதிகள் ஜம்முவுக்குள் நுழைந்து அங்கு ஆக்டிவ்வாக செயல்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறை வார்னிங் செய்துள்ளது. அவர்கள் பெரிய சதித்திட்டத்துடன் வந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நம் நாட்டின் ராணுவ வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியாகினர்.

இதையடுத்து நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை பாகிஸ்தானை நம் நாடு பந்தாடியது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. ராணுவ தளம், விமான தளம் நொறுக்கப்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து நம் நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதோடு பல்வேறு ஆபரேஷன்களை நடத்திய பயங்கரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது மத்திய உளவுத்துறை முக்கிய வார்னிங்கை தந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஆங்காங்கே பனி பெய்து வருகிறது. இப்படியான சூழலில் தான் ஜம்முவில் 30க்கும் அதிகமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
தற்போது காஷ்மீரில் ‛சில்லாய் கலான்' எனப்படும் 40 நாள் கடுமையான குளிர்காலம் நிலவி வருகிறது. இந்த குளிர்காலம் டிசம்பர் 21ம் தேதி தொடங்கியது. இது மோசமான வானிலையாகும். கடும் குளிருடன், பனிப்பொழிவும் கடுமையாக இருக்கும். இந்த காலநிலையை பயன்படுத்தி பெரிய சதித்திட்டத்துடன் அவர்கள் ஜம்முவுக்குள் நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நம் நாட்டின் ராணுவத்தினர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளவுத்துறையின் வார்னிங் மற்றும் ராணுவத்தினரின் தீவிர தேடுதல் பணி உள்ளிட்டவற்றால் பயங்கரவாதிகள் கிஷ்வார், தோடா போன்ற உயரமான மற்றும் மத்திய மலைப் பகுதிகளுக்கு சென்று பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் பயங்கரவாதிகள் அங்கு சென்று பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகள் பதுங்குவதாக கணிக்கப்பட்டுள்ள மலைத்தொடர், வனப்பகுதி, பள்ளத்தாக்குகளில் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த தேடும் வேட்டையில் ராணுவத்துடன் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் வீரர்கள், எஸ்ஓஜி எனும் சிறப்பு நடவடிக்கை குழுவினர் வனக்காவலர்கள், கிராம மக்கள் இணைந்துள்ளனர். தங்களின் ஏரியாக்களில் சந்தேகப்படும் படியாக யாராவது நடமாடினால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ராணுவம், காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தெர்மல் இமேஜர், கிரவுண்ட் சென்சார் உள்ளிட்டவையும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications