'சிறையிலிருந்தபடி மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?'.. மே.வங்கம் அதிரடி கேள்வி
கொல்கத்தா: மேற்கு வங்க அரசுப் பணிகளுக்கான தேர்வில் "சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு சாவர்க்கர் உள்ளிட்ட நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகினற்னர். ஆனால் பாஜகவோ யு.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வாணைய தேர்வுகளில் தங்கள் சித்தாந்தத்துக்கு ஆதரவான வினாக்களை கேட்டு வருகிறது.
அண்மையில் , யு.பி.எஸ்.சி தேர்வாணையம் நடத்திய மத்திய ஆயுதப்படை துணை ராணுவப் படை (CAPF) பணிகளுக்கான தேர்வில், பா.ஜ.கவின் குரலை எதிரொலிக்கும் வகையிலான கேள்விகள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி ஆகியவை விமர்சனங்கள் ஏற்படுத்தியது.

மம்தா பானர்ஜி
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானார்ஜி தலைமையிலனா திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசுக்கும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது,

பாஜகவிற்கு பதிலடி
யுபிஎஸ்சி தேர்வில் கேள்விகள் உருவாக்கிய பா.ஜ.க அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, அம்மாநில குடிமைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சாவர்க்கர் குறித்து கேள்வியை கேட்டுள்ளது.

மன்னிப்பு கடிதம்
அதாவது, "சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு சாவர்க்கர், திலக், சந்திசேகர் ஆசாத், சுக்தேவ் தபார் உள்ளிட்ட நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வரலாற்று நிகழ்வு
இதற்கு விடை சாவர்க்கர். சாவர்க்கரை பற்றி கேட்கப்பட்டிருந்த இந்த கேள்விக்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரோ, இதில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை . வரலாற்றில் நடந்த நிகழ்வே கேள்வியாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளனர்.

என்ன கடிதம்
பா.ஜ.கவினரால் 'வீர சாவர்க்கர்' என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் 1911ஆம் ஆண்டு முதல் பல முறை ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியிருந்தார். சாவர்க்கர் ஒரு கடிதத்தில் "ஆங்கில அரசு விரும்பும் எதையும் செய்ய நான் தயார். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கு செல்வேன்" என சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications