மேற்கு வங்கம், பஞ்சாப்பை தொடர்ந்து ஹரியானா.. 'பிடிவாத' காங்கிரஸுடனான கூட்டணியை முறிக்கும் ஆம் ஆத்மி!
சண்டிகர்: மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடனான உறவை ஆம் ஆத்மி முறித்துக் கொள்ளக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 4 தொகுதிகள் ஒதுக்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வந்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ், முதல்வர் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வந்தது. இதனால் கொந்தளித்த மமதா பானர்ஜி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது; இந்தியா கூட்டணியில்தான் நீடிப்போம். மேற்கு வங்கத்தில் தனித்தே போட்டியிடுவோம் என அதிரடியாக அறிவித்தார்.

இதேபோல பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து காங்கிரஸுடனான உறவை முறித்து கொள்வதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என்றார்.
இதனிடையே பீகார் மாநிலத்தில் "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், ஒட்டுமொத்தமாக கூட்டணிக்கே குட்பை சொல்லி விட்டு மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த பின்னணியில் தற்போது ஹரியானாவிலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளை தங்களை ஒதுக்க கோருகிறது காங்கிரஸ். ஆனால் ஆம் ஆத்மி இதனை ஏற்க மறுக்கிறது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானாவின் 10 தொகுதிகளிலுமே காங்கிரஸ் தனித்தே போட்டியிட தயாராக இருக்கிறது என்றார். இத்தகைய அறிவிப்பை ஆம் ஆத்மி ரசிக்கவில்லை. இதனால் ஹரியானா மாநிலத்திலும் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையேயான உறவு முறியும் என்கிற அறிவிப்பு எந்த நிமிடத்திலும் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள "இந்தியா" கூட்டணி இருக்குமா? இல்லையா ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications