ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: ஆந்திர ஆளுநரிடம் சிபிஐ விசாரணை
ஹைதராபாத்: வி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது நடந்த ஊழல் குறித்து ஆந்திர கவர்னர் நரசிம்மனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சி காலத்தில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதற்காக, இத்தாலி - பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் என்ற நிறுவனத்திடம், மத்திய அரசு, ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக,இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி,க்களுக்கு, அந்த நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது.
ஹெலிகாப்டர் வாங்குவது குறித்து 2005ம் ஆண்டு மார்ச் 1ம்தேதி, நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறப்பு பாதுகாப்பு படையின், முன்னாள் இயக்குனர் வான்ச்சூ ஆகியோரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தான் வகித்து வந்த மே.வங்க ஆளுநர் பதவியை நாராயணனும், கோவா ஆளுநர் பதவியை வான்ச்சூவும் ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மனும் இவ்வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று நரசிம்மனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
ஹெலிகாப்டர் ஒப்பந்தம் நடைபெற்ற 2005ம் ஆண்டு நரசிம்மன் இந்திய உளவுத்துறை இயக்குநராக இருந்தார் என்பதால் அவரையும் சாட்சியமாக சேர்த்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த டீல் குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, நரசிம்மனும் அந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை தொடர்ந்து, ஆந்திர ஆளுநரும் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
x
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications