பீகார் தேர்தலுக்காக நில ஆர்ஜித அவசர சட்டத்தைக் கைவிட்ட மோடி அரசு...
டெல்லி: நில ஆர்ஜித அவசர சட்டங்களை அடுத்தடுத்து பிறப்பித்து சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது பீகார் சட்டசபை தேர்தலுக்காக அதை கிடப்பில் போட முடிவு செய்திருப்பது என்பது பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு அம்சங்களுடன் நில ஆர்ஜித மசோதாவை கொண்டுவந்தது. பின்னர் மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த போது இதில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த திருத்தங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானதாகவும் பெருமுதலாளிகளுக்கு ஆதாவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மோடி அரசின் நில ஆர்ஜித திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

3 முறை அவசர சட்டம்
இதனால் நாடாளுமன்றம் முடங்கியது... வேறுவழியின்றி மத்திய அரசு நில ஆர்ஜிதத்துக்கான அவசர சட்டங்களை பிறப்பித்தது. 3 முறை இதேபோல் நில ஆர்ஜித அவசர சட்டங்களை பிறப்பித்துப் பார்த்தது மத்திய அரசு. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு எதிரான பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானதுதான் மோடி அரசு என்ற பிம்பத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர்.

4வது முறை?
இதையடுத்து வேறுவழியில்லாமல் நில ஆர்ஜித மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களையெல்லாம் ஏற்பதற்கு இறங்கி வந்தது மோடி அரசு. இந்த நிலையில் நில ஆர்ஜித அவசர சட்டம் ஆகஸ்ட் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் மீண்டும் இதற்காக ஒரு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டது.

பதுங்குதல்?
அதே நேரத்தில் ஓரிரு மாதங்களில் பீகார் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் விவசாயிகளின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக மோடி அரசு பதுங்கவும் செய்யலாம் எனக் கூறப்பட்டது.

கைவிட்டது மோடி அரசு
பீகார் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் மூன்றும் கை கோர்த்து நிற்கிறது. இத்தேர்தலில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற வாழ்வா? சாவா? போராட்டத்தில் பாரதிய ஜனதா இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டே தற்போது நில ஆர்ஜித அவசர சட்டத்தைக் கைவிட்டு விட்டது மோடி அரசு.
இதன் மூலம் விவசாயிகளுக்கு எதிரானது மோடி அரசு அல்ல என்பதை நிரூபிக்க பிரயத்தனப்படுகிறது பாரதிய ஜனதா.
இருப்பினும் பீகார் தேர்தலுக்கான ஸ்டண்ட்தான் இது என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப கை பிசைந்து நிற்கிறது பாரதிய ஜனதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications