Lift இல்லை.. உயரம் குறைகிறது.. மே டே அழைப்பில் விமானி சொன்ன கடைசி வார்த்தைகள்.. வெளியான தகவல்
சென்னை: அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி மேற்கொண்ட கடைசி May Day காலில் சொன்னது என்ன.. அவரின் கடைசி வார்த்தைகள் என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் குறித்த தகவல்கள்
இந்த ஏர் இந்தியா விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது. அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்கு 242 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்டவுடன் விமானி அவசர அழைப்பு விடுத்தார். இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் மேலே எழும்பவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக விமானத்தில் பிரச்சனை ஏற்படும் போது அதிலும்.. பெரிய பிரச்சனை ஏற்படும் போதே MayDay கால் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த விமானம் நொடிக்கு நொடி கவனிக்கப்பட்டு உதவி வழங்கப்படும்.
அந்த விமானம் டேக் ஆப் செய்த பின் போதிய அளவிற்கு உயரம் செல்ல முடியவில்லை. டேக் செய்த பின்பும் flops கீழே இறங்கி இருக்கும். இதுதான் விமானம் தொடர்ந்து மேலே செல்வதற்கு உதவியாக இருக்கும். ஆனால் அப்படி இருந்தும் விமானம் மேலே செல்லவில்லை. அஇதுதான் விபத்துக்கு காரணமாக மாறி இருக்கலாம் என்கிறார்கள். ஆனால், MayDay கால் கொடுத்த பின் அதன் பிறகு விமானம் ஏடிசியின் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. ஓடுபாதை 23-ல் இருந்து புறப்பட்ட உடனேயே விமானம் விமான நிலையத்தின் சுற்றுப்புறத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது.
விமானி சொன்ன கடைசி வார்த்தைகள்:
விமானி சொன்ன கடைசி வார்த்தைகள் பின்வருமாறு, விமானத்தில் போதிய உந்துதல் இல்லை.. (thrust இல்லை) விமானம் மேலே செல்லவில்லை, நாங்கள் உயரத்தை இழக்கிறோம் (we are losing lift).. மே டே.. மே டே என்று அந்த விமானி கூறி உள்ளார்.
விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் இயக்கினார். அவருக்கு உதவியாக கிளைவ் குண்டர் என்ற முதல் நிலை விமானி இருந்தார். கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8200 மணி நேரத்திற்கும் அதிகமான விமான அனுபவம் உள்ளது. மேலும், துணை விமானி கிளைவ் குண்டருக்கு 1100 மணி நேர விமான அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் அகமதாபாத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 1:39 மணிக்கு (UTC 08:09) ஓடுபாதை 23-ல் இருந்து புறப்பட்டதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ATC) தெரிவித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏடிசிக்கு "மேடே" அழைப்பு விடுத்தது. சரியாக விமானம் புறப்பட்ட 90வது நொடியில் .. அதாவது டேக் ஆப் செய்து விமானம் புறப்பட்ட பின் 90வது நொடியில் MayDay கால் வந்துள்ளது.
"மேடே" அழைப்பின் பயன்பாடு
விமானிகள் கடுமையான நெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டுமே இந்த "மேடே" அழைப்பை மேற்கொள்வார்கள். விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதும், பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போதும் இது பயன்படுத்தப்படும். விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திடம் (ATC) உடனடியாக உதவி தேவைப்படும்போது இந்த அழைப்பு விடுக்கப்படும்.
விமானங்களில் ஏற்படும் சில பிரச்சனைகளின்போது "மேடே" சமிக்ஞை பயன்படுத்தப்படுகிறது. இயந்திரக் கோளாறு, தீ விபத்து, அழுத்தம் இழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளின்போது இந்த சமிக்ஞை அனுப்பப்படுகிறது. விமானத்தை கடத்த முயற்சிக்கும்போதும், நடுவானில் சேதம் ஏற்படும்போதும் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications