பூட்டியிருந்த வீட்டில்! 87 கிலோ தங்க கட்டி, கட்டு கட்டாக பணம், 19 கிலோ நகைகள்! அதிர்ந்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு பூட்டிய வீட்டில் இருந்து ரூ 100 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள், நகைகள், உயர்தர கை கடிகாரங்கள் உள்ளிட்டவைகளை தீவிரவாத தடுப்பு படையினர் கைப்பற்றினர்.

குஜராத்தில் அகமதாபாத்தில் ஒரு அபார்ட்மென்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நீண்டகாலமாக ஒரு வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த வீட்டில் வருவாய் புலனாய்வுத் துறையினரும் தீவிரவாதத் தடுப்பு துறையினரும் ரெய்டு நடத்த முடிவு செய்தனர்.

ahmedabad gold

அங்கே சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து உறவினர்களின் வீட்டில் இருந்து அந்த வீட்டின் சாவியை பெற்றனர். அந்த உறவினர்கள் அதே அபார்ட்மென்டில் 4 ஆவது தளத்தில் உள்ளார்.

87 கிலோ தங்கம்

அப்போது அந்த வீட்டை திறந்து உள்ளே சென்று சோதனை செய்த போது 87.9 கிலோ தங்க கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள், 11 உயர்தர வாட்சுகள், 1.37 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

57 கிலோ கடத்தல்

மேலும் அந்த வாட்சுகள் கோடி கணக்கான மதிப்புடையதாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ரொக்கம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அதிகாரிகள் நோட்டு எண்ணும் மெஷினை கொண்டு வந்து கணக்கிட்டனர். மேற்கண்ட தங்கத்தில் குறைந்தபட்சம் 57 கிலோவாவது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்பட்டிருக்கும் என சொல்லப்படுகிறது.

பூட்டப்பட்டிருந்த வீடு

இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரின் உறவினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த வீடு மேகஷா என்பவர் வாடகைக்கு அந்த அபார்ட்மென்டை எடுத்தது தெரியவந்தது. அவருடைய தந்தை மகேந்திரா ஷா. இவர் துபாயில் பங்கு சந்தை முதலீட்டாளராக இருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மேகஷாவையும் மகேந்திரஷாவையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஷெல் நிறுவனங்கள் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

அதிகாரிகள் சொன்னது என்ன

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் டிஎஸ்பி அளித்த தகவலின்படி அந்த வீட்டிற்கு ரெய்டுக்காக சென்றோம். வீடு பூட்டியிருந்ததால் விசாரித்த போது உறவினர் வீட்டில் சாவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதே அபார்ட்மென்டில் 4ஆவது தளத்தில் இருக்கும் உறவினரிடம் சாவி வாங்கி, திறந்து பார்த்த போதுதான் ரூ. 100 கிலோ தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது என தெரிவித்தனர்.

ரன்யா ராவ் தங்க கடத்தல்

பெங்களூரை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் என்பவர் துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14.8 கிலோ மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டனர். அவரின் முன்னாள் காதலர் தருண் கொண்டாரு ராஜுவும் இந்த வழக்கில் கைதானார்.

தான் அப்பாவி- ரன்யா

இதுகுறித்து ரன்யா, வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் கூறுகையில் சிலர் மிரட்டியதால்தான் தங்கக் கடத்தலில் ஈடுபட்டேன். தங்க கட்டிகளை யார் கொடுப்பார்கள் என்பது கூட எனக்கு தெரியாது என தெரிவித்திருந்தார்.

தருணிடம் விசாரணை

இதுகுறித்து தருணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நானும் ரன்யாவும் சேர்ந்து 2023 ஆம் ஆண்டு துபாயில் ஒரு நிறுவனத்தை தங்கம் கடத்துவதற்காகவே தொடங்கினோம். அங்கு வைத்துதான் ரன்யா பலரிடம் வியாபாரம் பேசி தங்கத்தை கடத்தினார். ஹவாலா பணமும் அந்த நிறுவனத்தில் வைத்துதான் மாற்றப்பட்டது.

தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து மட்டும் தங்கம் கடத்தவில்லை. ஜெனிவா, பாங்காங்கில் இருந்தும் ரன்யா தங்கத்தை கடத்தினார். தங்கம் கொடுக்கும் விஷயத்தில் துபாயை சேர்ந்த ஒரு நபர் எங்களை ஏமாற்றி ரூ 1.50 கோடி மோசடி செய்துவிட்டார். துபாயில் தங்கத்தை கடத்தும் ரன்யா ராவ், விமான நிலையத்தில் ஜெனிவா செல்வதாக கூறிவிட்டு என் பெயரையும் அவர் பயன்படுத்தியிருந்தார். தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டதே ரன்யா ராவ்தான். இவ்வாறு தருண் ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+