ஓவர் வெயிட்... 125 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஏர் இந்தியா திட்டம்
டெல்லி: உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி விமானப் பணிப்பெண்கள் உட்பட 125 ஊழியர்களை பணியிலிருந்து விலக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிமுறைகளின்படி, பணிப்பெண்கள் உட்பட விமானக் குழுவினர் அனைவரும் தங்கள் உடல் எடையை குறிப்பிட்ட அளவில் பராமரிக்க வேண்டும்.

ஆனால், கடந்த ஆண்டு இந்த விதிமுறைகளின் படி உடல் எடையை சுமார் 600 ஊழியர்கள் பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே அவர்களை எச்சரித்தது ஏர் இந்தியா. கடைசியாக உடல் எடையைக் குறைக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாமல், இத்தனை மாதங்கள் கடந்த பின்னும் உடல் எடையை பராமரிக்காமல் பணிப்பெண்கள் உட்பட 125 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்களைப் பணியில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களில் சிலருக்கு விமான நிலையத்தில் இருந்தபடி செய்யும் வேலைகள் கொடுக்க இருப்பதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications