அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் அணிக்கும் பார்கோடு அடையாள அட்டை; வேறென்ன ஏற்பாடுகள்?

Subscribe to Oneindia Tamil

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) நடைபெறுவதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் அணியினர் தீவிரமாக செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பார்கோடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதால், இந்த முறை நுழைவு வாயிலில் சோதனைக்கு பின்னர் உறுப்பினர்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையின் புறநகர் பகுதியான வானகரத்தில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் கடந்த முறை நடந்த பொதுக்குழுவின் போது, அதிமுகவில் ஒற்றைதலைமை வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டு கூச்சலிட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர், ஒபிஎஸ்சுக்கு எதிராக பேசியதோடு, தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் என பேசினர்.

AIADMK general council gathered in a unique manner today
BBC
AIADMK general council gathered in a unique manner today

2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசைனிடம் அளித்தார். ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது என்று பேசிய சி.வி.சண்முகம், இரட்டைத் தலைமையோடு திமுக-வை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். அத்துடன் அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை புதிய அவைத் தலைவர் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்மகன் உசைன் பேசியபொழுது, அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம்தேதி நடைபெறும் என்று சொன்னதும் கோஷங்கள் அதிகமானது.

பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து ஓபிஎஸ் மேடையில் இருந்து கீழே இறங்கினார் அப்போது அவர் மீது பாட்டில் வீசப்பட்டது. வழி நெடுகிலும் ஓபிஎஸ் ஒழிக என தொண்டர்கள் முழக்கமிட்டனர். அதற்கு முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடந்த பொதுக்குழு தீர்மான கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு ரத்தகாயம் ஏற்பட்டு அவர் வெளியேறினார்.

இதுபோல அதிமுகவில் ஒபிஎஸ்-இபிஎஸ் அணியினர் மத்தியில் மோதல் அதிகரித்துள்ளது. இதனால், இந்த முறை நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்று, கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கும் இபிஎஸ் அணியினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக, பொதுக்குழு உறுப்பினர்கள், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களுக்கும் பார்கோட் உள்ள அடையாள அட்டை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ம்தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கவேண்டும் என கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வழக்கில் இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்தார்.

அதனால், ஓபிஎஸ் அணியினர், பொதுக்குழு தொடர்பான வழக்கில், அந்த கூட்டத்தை ஓபிஎஸ்சின் ஒப்புதல் பெறாமல் கூட்டப்பட்டதால் கூட்டம் நடைபெறாது என தீர்ப்பு வரும் என காத்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை பொதுக்குழுகூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்காக அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுக்குழு ஏற்பாடுகள் என்ன?

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்காக வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என இருவரின் புகைபடங்களும் இடம்பெற்றன. இந்த முறை அந்த பேனர்களில் ஓபிஎஸ் படம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் வரும் வழி நெடுக அவருக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களிலும் ஒற்றை தலைமை நாயகன் என்றும் காட்சியை வழிநடத்தும் தலைவன் எனவும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தனியார் பாதுகாப்பு நிறுவனம் மூலம் ஞாயிறு இரவு முதலே பொதுக் குழு நடைபெறும் மண்டபம் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது என இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், '' கூட்டத்திற்கு வரும் உறுப்பினர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போன்ற, பார்கோடு கொண்டுள்ள கார்டை வைத்திருக்கவேண்டும். அந்த கார்டை ஸ்வைப் செய்தால் மட்டுமே உள்ள செல்லமுடியும். இந்த கார்டை ஏற்கனவே உறுப்பினர்களுக்கு அளித்துள்ளோம். இந்த முறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்.

மற்றவகையில், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் பாதுகாவலர்கள் மண்டபத்தில் இருப்பார்கள். கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுவதற்காகவும், பாதுகாப்பாக நடைபெறுவதாகவும் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்,''என்கிறார் வைகை செல்வன். கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்கள் செல்போன் எடுத்துச்செல்லலாம் என்றும், பாதுகாப்பு கருதிதான் ரேடியோ பிரிக்வென்ஸி பார்கோட் தரப்பட்டுள்ளது என்கிறார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜிடம் பொதுக்குழுகூட்டம் பற்றி பேசியபோது, ''கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்தவர்கள் தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் கொடுத்துள்ளார்கள். எனக்கும் கூட, பார்கோடு அடையாள அட்டை வந்துள்ளது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என்பதால் அந்த அட்டைக்கு வேலை இருக்காது,'' என்கிறார்.

ஓபிஎஸ் தொடுத்த வழக்கின் பின்னணி

அதிமுக பொதுக்குழு
Getty Images
அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி கூடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென வழக்கு ஒன்றை ஒபிஎஸ் அணி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ஓபிஸ்அணி மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக மேல் முறையீடு விசாரணை நடத்தப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் பற்றி மட்டும் முடிவெடுக்கலாம் என்று அறிவித்தனர். ஆனால், ஜூன் 23ம்தேதி நடந்த கூட்டத்தில், அந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பொதுக் குழுவில் அறிவித்தார். மேலும் தமிழ் மகன் உசைன் நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டது.

அதிமுக பொதுக்குழு
Getty Images
அதிமுக பொதுக்குழு

இதனைஅடுத்து, அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11ம் தேதி நடக்குமென தமிழ்மகன் உசைன் அறிவித்தது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எடப்பாடி கே. பழனிசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரைத் தண்டிக்க வேண்டுமென்றும் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு ஏதுவாக அவர்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமென இரண்டாவதாக மேலும் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ் மகன் உசைன் அழைப்பு விடுத்துள்ளபடி, ஜூலை 11ம் தேதி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென மூன்றாவதாக ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டுமென இபிஸ் அணியும் கடந்த ஜூன் 28ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதோடு, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் ஜூலை 6ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
Getty Images
அதிமுக பொதுக்குழு

அதில் சென்னை உயர்நீதிமன்றம் 23ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. அதோடு, அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டபடி ஜூலை 11ம் தேதி நடைபெறலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ''பொதுக்குழு கூட்டம் தொடர்பான இதர அம்சங்கள் குறித்த இடைக்கால மனுக்களை உரிமையியல் வழக்கை விசாரிக்கும் தனி நிதிபதி முன்பாக முறையிடலாம். மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூடுதல் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், பிரதான வழக்கை ஜூலை 19ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது. இதனால், இபிஎஸ் அணியினர் முடிவு செய்ததுபோல, பொதுக்குழு நடைபெறவுள்ளது.

https://www.youtube.com/watch?v=KjFsXITkuko

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+