எய்ட்ஸ்.. ரூ.45 லட்சம் தங்க நகையை தந்தும் அடங்காத மாமியார்.. எச்.ஐ.வி. ஊசி போட்டதுமே.. அந்த மருமகள்?
கான்பூர்: எவ்வளவுதான் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்தாலும், சில பெண்களின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.. அதிலும் பெண்ணுக்கு பெண்ணே, எதிரியாகும் போக்கு, கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அப்படித்தான் ஒரு கொடுமை ஒரு அப்பாவி பெண்ணுக்கு நடந்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகின்றன.. இதில், முக்கிய காரணங்களில் ஒன்றாக வரதட்சணை கொடுமை உள்ளது.

நம்முடைய நாட்டில், வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் சட்ட விரோதம் என்று தெரிந்திருந்தும், பெரும்பாலான திருமணங்களில் வரதட்சணை வலிய, திணித்து கொடுக்கப்படுகிறது... பல இடங்களில் கட்டாயப்படுத்தி பெறப்படுகிறது.
இதனால் ஏழைகள் முதல் நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என பலதரப்பட்டவர்கள், தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வரதட்சணை கொடுத்தும், பெற்றும் வருகிறார்கள். எனினும், இந்த வரதட்சணைகள்தான், ஆயிரம் கனவுகளுடன் கணவனுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கும், அப்பாவி பெண்களின் உயிரையே பறித்துவிடுகிறது.
பெருகும் குற்றச்சம்பவங்கள்
இப்படி வரதட்சணை பெறுவதும், கொடுப்பதும் அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று சிலர் சொன்னாலும், பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு காரணமாகிவிடுகிறபோது, வரதட்சணை என்பது சமூகப்பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. இதோ உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள ஒரு அக்கிரமத்தை பாருங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன் காலியர் காவல் நிலையத்துக்குட்பட்டது ஜஸ்ஸா வாலா என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அபிஷேக்.. இவருக்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று இளம்பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
அள்ளி அள்ளி தந்த நகைகள்
திருமணத்தின்போது, காஸ்ட்லியான கார், நகைகளை பெற்றோர் வீட்டில் தந்திருக்கிறார்கள். தன்னுடைய மாமியார் வீட்டில், தங்கள் ஆசை மகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் பெண்ணிற்கு வரதட்சணையாக தந்திருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட கல்யாணத்துக்கு ரூ.45 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள்.
இதற்கு பிறகு மறுபடியும் ரூ.10 லட்சம் ரொக்கமும், இன்னொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக வேண்டு என்று மருமகளை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளார் மாமியார்.. இந்த விவகாரம் ஊர்பஞ்சாயத்து வரை போனது.. இறுதியில் பஞ்சாயத்தில் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டது.
விடாத கொடுமைக்கார மாமியார்
ஆனாலும் மாமியார் விடுவதாக இல்லை.. மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.. இதன் உச்சக்கட்டமாக மருமகளுக்கு எச்ஐவி தொற்று சிரின்ஜை பயன்படுத்தி, ஊசி செலுத்தி, நோய் பாதிப்பை ஏற்படுத்தினார்.. இதனால், மருமகளுக்கு உடல்நிலை வேகமாக மோசமடைய துவங்கியது.
நாளுக்கு நாள் உடம்பு மோசமாகவும், மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்தபோதுதான், அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் அப்பா, போலீசில் சென்று புகார் தந்துள்ளார்.. ஆனால், அவரது புகாரை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம்.
கோர்ட்டுக்கு போன அப்பா - பெண்
இதனால், பாதிக்கப்பட்ட பெண்ணும், அப்பாவும், சஹாரன்பூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப்பிரதேச போலீசுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து காங்கோ போலீஸ் ஸ்டேஷனில், பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications