விமானி கேபினுக்குள் திடீர் புகை: ஏர் இந்தியா விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கம் !
டெல்லி: டெல்லியில் இருந்து மிலன் நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், விமானியின் கேபினுக்குள் இருந்து திடீர் புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து 167 பயணிகளுடன் மிலன் நகருக்கு சென்று கொண்டிருந்தது ஏர் இந்தியா விமானம். அந்த விமானம் கிளம்பி 40 நிமிடத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானி கேபினுக்குள் இருந்து புகை கிளம்பியது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி கொண்டுவரப்பட்டு சுமார் 4.40 மணியளவில் தரையிறக்கப்பட்டது. 167 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான கேபினிற்குள் தீடிரென புகை கிளம்பியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக மிலன் அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Air India flt 137 Delhi to Milan which departd at 1500 hours has reportd smoke inside the cabin.Full emergency landing back at IGI.
— CP Delhi (@CPDelhi) January 26, 2016 -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications