Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமான விபத்தில் இறந்தோருக்கு ரூ.1 கோடி.. காயமடைந்தோரின் சிகிச்சை செலவையும் ஏற்ற டாடா குழுமம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறியுள்ளதாக அந்த எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

air-india-plane-crash-tata-group-will-provide-rs-1-cr-to-the-families-of-each-person-who-has-lost-t

ஏர் இந்தியா விமானம் 171 விபத்து பற்றி அறிந்து நாங்கள் மிகவும் வேதனையடைந்தோம். எங்களின் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. விமான விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்காக எங்களின் பிரார்த்தனைகள் உள்ளன.

இந்த துயரத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகளையும் நாங்களே ஏற்போம். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவையும் நாங்கள் உறுதி செய்வோம். பிஜி மருத்துவ விடுதியை கட்டி கொடுக்க ஆதரவு வழங்குவோம். கற்பனை செய்ய முடியாத இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் இருக்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமத்தின் வசம் தான் உள்ளது. இந்த நிறுவனத்தின் 74.6 சதவீத பங்கு டாடா குழுமத்திடமும், 25.1 சதவீத பங்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இதனால் தான் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை ஏற்பதாவும் டாடா குழுமம் அறிவித்துள்ளது.

நாட்டையே உலுக்கிய உள்ள இந்த விமான விபத்து இன்று மதியம் 1.40 மணிக்கு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 முதல் 2021ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த விஜய் ரூபானியும் இந்த விமான விபத்தில் பலியாகி உள்ளார்.

இந்த சம்பவம் மொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விமான விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+